பெங்களூர் உல்லாசம்.. கண்ணை மறைத்த "கருமம்".. பெற்ற குழந்தையை.. கடித்து கடித்து வைப்பாராம் "அபிராமி"
பெங்களூர்: சிகரெட்டால் சூடு வைத்து மகளை கொடுமைப்படுத்தியிருக்கிறார் பெற்ற தாய்.. என்ன நடந்தது பெங்களூரில்?
நாளுக்கு நாள் இந்த கள்ளக்காதல் அட்டகாசங்கள் எல்லை மீறிக்கொண்டிருக்கின்றன.. அதைவிட முக்கியமாக, இந்த கள்ளக்காதலர்களின், அரக்க குணத்துக்கு, உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன..

பெற்ற தாயே துடிதுடிக்க கொல்லும் பயங்கரங்களும், நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூர சித்ரவதைகளும் நம்ம தமிழ்நாட்டிலேயே நடந்து வருவது, பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.
கடந்தவாரம்கூட, ஸ்ரீப்ரியா என்ற 19 வயது பெண், தன்னுடைய 11 மாத ஆண் குழந்தையை கொன்றுவிட்டார். கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருக்க முடியவில்லை என்பதற்காக, குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, ஒரு சூட்கேஸில் சடலத்தை எடுத்துக்கொண்டு, திருச்சூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருக்கும் ஓடையில் வைத்துவிட்டு வந்துவிட்டார். இப்போது ஸ்ரீபிரியா ஜெயிலில் உள்ளார்.
பெங்களூர்: இதோ பெங்களூரில்கூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆயிஷா.. இவர் இம்ரான் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 10 வயதில் மகளும், மகனும் இருக்கிறார்கள்.
ஆனால், காதலிக்கும்வரை மகிழ்ச்சியாக இருந்தவர்கள், கல்யாணம் செய்ததுமே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள்.. கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதிக்குள் நிறைய தகராறு ஏற்பட்டது.. ஒருகட்டத்தில், தன்னுடைய கணவரிடமிருந்து ஆயிஷா பிரிந்துவிட்டார். அப்போது தன்னுடைய மகன், மகளையும் தன்னுடனேயே அழைத்து சென்றுவிட்டார்.
கள்ளக்காதலன்: இந்த நிலையில், ஜே.ஜே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் இம்ரான் கான் ஒரு புகார் தந்துள்ளார்.. அதில், தன்னுடைய மகளை, ஆயிஷாவும், அவரது கள்ளக்காதலன் சலீம் ஜாபீர் இருவருமே துன்புறுத்துவதாக புகார் தந்துள்ளார்.
புகாரில், "என் மகளை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.. சிகரெட்டால் உடம்பில் சூடு வைத்திருக்கிறார்கள்.. அவரது காதலன் சலீம், சிகரெட்டால் குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். குளிர் சாதனப் பெட்டியில் இருந்து, ஐஸ் வாட்டரை எடுத்து, குழந்தை மீது ஊற்றியிருக்கிறார்கள்.. குழந்தையை உடம்பெல்லாம் ஆயிஷா கடித்து கடித்து வைத்திருக்கிறார்.. அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.
மிரட்டல்: இதை வெளியே சொன்னால் உன்னையும், உன் அப்பாவையும் கொன்றுவிடுவதாக ஆயிஷாவும், சலீமும் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயந்து போன குழந்தை, தனக்கு நடக்கும் சித்ரவதை குறித்து என்னிடம் சொல்லவில்லை.
ஆனால், நாளுக்கு நாள் துன்புறுத்தல் அதிகமானதால் என்னிடம் குழந்தை கூறியுள்ளார். எனவே, இந்த புகாரின் அடிப்படையில் குழந்தையை அடித்து சித்ரவதை செய்த ஆயிஷா, அவரது காதலன் சலீம் ஜாபீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறியிருந்தார்.
குழந்தை: பிறகு இம்ரான் கான் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொன்னபோது, கடந்த "பிப்ரவரி 24 அன்று, நான் என்னுடைய குழந்தையை ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றுவிட்டு, மறுபடியும் ஆயிஷா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டேன். சிறிது நேரத்தில், என் மகள் வீடியோ காலில் என்னை அழைத்தாள்..
என்னுடன் வெளியே சென்றதற்காக அவளது அம்மா, கட்டையால் அடிப்பதாக சொல்லி அழுதாள்.. உடனே நான் கிளம்பி வந்து, என்னுடைய 2 குழந்தைகளையும் என் வீட்டிற்கே அழைத்து சென்றுவிட்டேன். மகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாள்.. அவளுடைய உடல்நிலை மோசமாகிவிட்டது..
காயங்கள்: நான் அவளை விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றேன்.. அப்போதுதான், உடம்பிலிருந்த காயங்கள் தென்பட்டன.. அங்கு அவள் அனுபவித்த சித்திரவதை பற்றியும் அழுதுகொண்டே கூறினாள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆனால், ஆயிஷா தரப்பிலோ இதற்கு மறுப்பு சொல்கிறார்கள்.. தன் கணவர் விவாகரத்து கேட்பதாகவும், ஆனால் அதில் கையெழுத்து போட தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதற்காக, மகளை வைத்து அபாண்டமாக தன்மீது பழி சொல்வதாகவும் ஆயிஷா சொல்கிறார்.
வழக்கு: எனினும், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் ஆயிஷா, அவரது காதலன் சலீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் உடம்பில், சிகரெட்டால் சுட்ட காயங்கள் இருந்ததால், ஆயிஷா உட்பட அவரது உறவினர்கள் 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆயிஷாவிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த குழந்தைக்கும் சிகிச்சை நடக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications