சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா? திடுக்கிடும் அறிக்கை வெளியிட்ட உயர்மட்டக்குழு!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசாக இருந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா, சசிகலா பெங்களூரில் சிறையில் சொகுசாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதும் அவர் குற்றம்சாட்டினார்.
இதன்பின் இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தாக்கல் செய்ய அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

புகார் உண்மை
அதன்படி புகார் கூறிய டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு சிறையில் கூடுதல் வசதிகள் அளிக்கப்பட்டது உண்மைதான். ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் நிறைய விதிகள் மீறப்பட்டுள்ளது. முக்கியமாக அடிக்கடி நிறைய பார்வையாளர்கள் வந்து சென்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விளக்கம்
அதேபோல் சிறையில் சசிகலா, இளவரசி இருவரும் சாதாரண உடையில் இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சியில் இருப்பது போல இவர்கள் வெளியே சென்று வந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. கையில் இருக்கும் பையை வைத்து இவர்கள் வெளியே சென்று இருக்கிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறைத்துறை விளக்கம்
இதற்கு சிறைத்துறை அளித்த விளக்கமும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறைத்துறையின் கூற்றுப்படி, சசிகலா தன்னை சந்திக்க வந்தவர்களை பார்க்கவே சென்றார். அதுதான் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அவர்கள் கொடுத்த உணவுதான் கையில் உள்ள பை என்றுள்ளனர்.

என்ன பதில்
இந்த நிலையில் இதை விசாரணை ஆணையம் மறுத்துள்ளது. பார்வையாளர் சந்தித்த நேரமும், சிசிடிவி வீடியோ நேரமும் ஒரே நேரம் கிடையாது என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது. இவர்கள் அந்த நேரத்தில் பார்வையாளர்களை சந்திக்கவில்லை என்றும் விசாரணை குழு தெரிவித்துள்ளது, இதனால் சசிகலா ஷாப்பிங் சென்று இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications