பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மேலாடையை" கழட்ட சொன்னாங்க.. குமுறிய பெண் பயணி.. ஒரே நாளில் ஏர்போர்ட் மேட்டர் அம்பலம்.. பளீர் பளார்

பெண் பயணியை சிஐஎஸ்எப் வீரர்கள் பெங்களூரு ஏர்போர்ட்டில் அவமதித்தார்களா

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஒரே நாளில் பெண் பயணி ஒருவரின் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது.. பெங்களூர் ஏர்போர்ட்டில் நடந்ததாக சொல்லப்பட்ட சம்பவம், பொய்யானது என்றும் விசாரணையில் உறுதியாகி உள்ளது.. என்ன நடந்தது?
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது... நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்ல கூடிய இந்த ஏர்போர்ட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்காக சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

அவர்கள் வீட்டு தனிமையிலும் இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஏர்போர்ட்டில் சிஐஎஸ்எப் என்று சொல்லப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் உள்ளனர்...

மீண்டும் ஒரு ஷாக்.. கசந்து போன லிவ் இன்! பிரஷாந்தை துரத்திய சுனிதா! என்ன ஒரு நாடகம்..பதறிய பெங்களூரு மீண்டும் ஒரு ஷாக்.. கசந்து போன லிவ் இன்! பிரஷாந்தை துரத்திய சுனிதா! என்ன ஒரு நாடகம்..பதறிய பெங்களூரு

செக்கிங்

செக்கிங்

விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை இந்த சிஐஎஸ்எப் வீரர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர்... அந்தவகையில், கிருஷ்னானி காத்வி என்ற இளம்பெண், தனக்கு ஏர்போர்ட்டில் அவமானம் நேர்ந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.. இவர் ஒரு இசைக்கலைஞரும்கூட.. பெங்களூரு ஏர்போர்ட்டில் சோதனையின்போது, இந்த பெண்ணின் மேலாடையை கழற்றும்படி அங்கிருந்தவர்கள் கேட்டுக் கொண்டார்களாம்.. "என்னுடைய ஆடைகளை கழற்ற சொன்னார்கள்.

மேலாடை

மேலாடை

ஒரே ஒரு உள்ளாடையை மட்டுமே அணிந்து கொண்டு, பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்றது உண்மையில் அவமதிப்புக்கும், வேதனைக்கும் ஆளாக்கியது.. ஒரு பெண்ணாக பலரது கவனம் ஈர்க்கும் வகையில் நிற்பது என்பது ஒருபோதும் விரும்பத்தகாத ஒன்று.. ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்ற செய்ய வேண்டும்.. இது அபாயமானது.. ஆடையை கழற்றி சோதனை செய்ய உங்களுக்கு பெண் தான் கிடைத்தாரா?'' என்று பெங்களூர் விமான நிலைய ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து அந்த பெண் தன் ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.

தவறு

தவறு

இந்த ட்வீட்டை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.. அதிலும், விமான நிலைய நிர்வாகம், உடனடியாக அந்த பெண்ணுக்கு பதில் தந்தது... மன்னிப்பும் கேட்டது.. "தவறுதான், சிரமத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்., இது நடந்திருக்க கூடாது... இதுபற்றி எங்களது செயல் குழுவினருக்கு தெரிவித்து உள்ளோம். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கவனித்து வரும் பாதுகாப்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது" என்று பதிவிட்டது.

 மிரண்ட ஏர்போர்ட்

மிரண்ட ஏர்போர்ட்

இந்த பதிவுக்கு பிறகு, மறுபடியும் ஒரு ட்வீட்டை ஏர்போர்ட் நிறுவனம் பதிவிட்டது.. அதில், உங்களுடைய தொடர்பு எண், பிற விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம் என்று அந்த பெண்ணை கேட்டிருந்தது.. ஆனால், அந்த பெண் இதற்கு பதில் சொல்லவில்லை.. உடனே ஏர்போர்ட் நிறுவனம், சம்பந்தப்பட்ட பெண், தன்னுடைய பயணம் தொடர்பான எந்த விபரங்களையும் தரவில்லை.. நடடந்த சம்பவம் தொடர்பாக முறைப்படி புகாரும் தரவில்லை.. இப்படி பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டை வைத்தால், எப்படி நடவடிக்கை எடுப்பது? என்று கேட்டிருந்தது. எனினும், அந்த பெண்ணின் ட்வீட் குற்றச்சாட்டை வைத்து விசாரணையை ஏர்போர்ட் நிர்வாகம் உடனடியாக துவங்கியது..

 ஆடையை கழற்றி

ஆடையை கழற்றி

அப்போது, விமான நிலைய பாதுகாப்பு பிரிவு உயரதிகாரி இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.. அதெப்படி இந்த நிகழ்வு சாத்தியம்? சுற்றிலும் எல்லா இடத்திலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.. கேமரா இருப்பது எங்களுக்கெல்லாம் தெரியும்.. நாங்கள் எப்படி இந்த காரியத்தை செய்வோம்? இந்த புகார் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.. ஆனால், சில சமயங்களில் பயணிகளை சோதனை செய்யும்போது, ஜாக்கெட்டுகள், செருப்புகள், அங்கிகளை, அகற்ற சொல்வது வழக்கமான ஒன்றுதான்.. எனினும் சோதனையால் பாதிக்கப்பட்டதாக சொல்லும்பெண், போலீஸ் நிலையத்தில் புகார் தராமல், ட்வீட்டை ஏன் பதிவிட்டார்? என்று பதில் கேள்வி எழுப்பினார்.

 கழன்ற ஜாக்கெட்

கழன்ற ஜாக்கெட்

இதையடுத்து, சிஐஎஸ்எப் நிர்வாகம் சார்பில் தரப்பட்டுள்ள விளக்கத்தில், ஏர்போர்ட்டில் ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் நிற்க வைத்தாக பெண் பயணி சொன்னது தவறான தகவல்.. எனவே அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.. பாதுகாப்பு சோதனைக்காக ஜாக்கெட்டை ஸ்கேனரில் வைக்க சொன்னோம்.. ஜாக்கெட்டை கழற்றி கொடுக்க அந்த பெண் தயங்கினார்.. எனவே, ஜாக்கெட்டை கொண்டு வரும்வரை, ரூமில் இருக்கும்படி சிஐஎஸ்எப் பெண் ஊழியர் அறிவுறுத்தினார்.. ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து, அங்கேயே நின்றார், இப்படி ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருக்கிறார்" என்று விளக்கம் தரப்பட்டது.

 கிழிந்த முகத்திரை

கிழிந்த முகத்திரை

இப்படி ஏர்போர்ட் தரப்பிலும், சிஐஎஸ்எப் நிர்வாகம் தரப்பிலும் விசாரணைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டதுடன், அந்த பெண் அளித்த புகாரும் பொய் என்று முகத்திரை கிழிக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த பெண் பதிவிட்டிருந்த ட்வீட்களை காணோமாம்.. அவர் அந்த புகார்களை அழித்துள்ளதாக தெரிகிறது.. அவரது டுவிட்டர் பக்கமே இல்லை என்றும் தகவல் வருகிறதாம்.. ஒருவேளை பலரும் அவரிடம் தொடர்பு கொண்டு, ஆறுதல் என்ற பெயரில் பிற விவரங்களை கேட்பது எரிச்சலூட்டியதால், அவரே ட்விட்டரில் இருந்து வெளியேறி இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் ஒரே நாளில், இந்த போலி சம்பவம் பரபரப்பாகிவிட்டது.

English summary
Did the CISF team insult the woman passenger at Bengaluru Airport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X