ஏ ஏ பட்டிக்காட்டான், கிராமத்தான்".. புருஷனை இப்படித்தான் கூப்பிடுவாராம் "பியூட்டி".. கடைசியில இப்படி?
பெங்களூர்: நிறம், உருவத்தை வைத்து, ஒருவரை எடைபோடுவதும், வெளிப்புற தோற்றத்தை வைத்து மட்டமாக நினைப்பதும், தொடர்கதையாகிவிட்டது.. குடும்ப உறவுகளிடமும் இந்த பேதம் தலைதூக்கி வருவதுடன், உயிரையும் சேர்த்து குடித்துவருகிறது.
இந்த "நிறவெறி" காலம் காலமாக, வல்லரசு நாடுகளில்தான் தலைதூக்கி அப்பாவி உயிர்களை பலிகடா ஆக்கி வருகிறது என்றால், நம்ம நாட்டிலும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது தொடர்ந்து வேதனையை தந்து வருகிறது.

கடந்த மாதம்கூட, அப்பாவி பெண் ஒருவர் கேரளாவில் கொலையே செய்யப்பட்டுவிட்டார்.. அப்துல், என்பவரது 2வது மனைவி ஷஜீரா.. இவர் சற்று கலர் குறைவாக இருப்பாராம்.. மனைவி கருப்பாக இருப்பது ஷிகாப்புக்கு பிடிக்காததால், மனைவியின் நிறத்தை சொல்லி அடிக்கடி அவரை கிண்டல் செய்தும், கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார். செல்போனைக் கூட தொடக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார்.
கொடுமை முடிவு: மீன் பிடித்து வரலாம் என்று, ஆற்றங்கரைக்கு சென்று, அந்த ஆற்றிலேயே மூழ்கடித்து கொன்றும்விட்டார் கணவர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இவரை கைது செய்தாலும், தோற்றத்தை வைத்து இளக்காரமாக ஒருவரை நடத்தும்போக்கு தொடர்ந்தே வருகிறது. இதோ கர்நாடகாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ளது, குந்தூரி பாளையா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மஞ்சுநாத்.. 38 வயதாகிறது.. மெட்ரோவில் என்ஜினியராக வேலை பார்த்து வருபவர்.. இவரது மனைவி பெயர் பிரியங்கா.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்களாகிவிட்டது.. ஒரு குழந்தையும் உள்ளது.
சடலம்: இந்நிலையில், மஞ்சுநாத் திடீரென தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... தகவலறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்த மஞ்சுநாத் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், மஞ்சுநாத் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி பிரியங்கா என்பது தெரியவந்தது.
கல்யாணம் ஆன நாளிலிருந்தே, கணவனை, மட்டமாக நடத்தி வந்துள்ளார் பிரியங்கா.. கிராமத்தான் கிராமத்தான் என்று கிண்டல் கேலி செய்து கொண்டேயிருப்பாராம்.. அதுமட்டும் இல்லாமல், சேர்ந்து வாழ பிடிக்கவேயில்லை என்றும் கணவரிடமே வெளிப்படையாகவே சொல்லி கொண்டேயிருப்பாராம். இதனால், ஆரம்பத்தில் இருந்தே மனஉளைச்சலில் மஞ்சுநாத் இருந்துள்ளார்..
பிரியங்கா காரணம்: நாளுக்கு நாள் பிரியங்காவின் விமர்சனம் அதிகமாகிவிட்டதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் மஞ்சுநாத்.. மனைவி தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக, தன்னுடைய சகோதரருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, அதற்கு பிறகுதான் தூக்கிட்டு தற்கொலையே செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தான் என்று மனைவி, விமர்சித்து பேசி மனசை நோகடித்ததால், மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையே செய்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications