150 முறை அழைத்தும் மனைவி போன் வெயிட்டிங்.. 5 மணி நேரம் பறந்து வந்த கணவன்.. நடந்த பயங்கரம்
பெங்களூர்: ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல.. 150 முறை போன் செய்தும் மனைவி எடுக்காததால் கடுப்பான போலீஸ் கணவன், 230 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்து மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கோஷ்க் கோட்டை அடுத்த களத்தூரர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் பிரதீபா (வயது 24)) என்ற பெண்ணுக்கும், கோலார் மாவட்டம் வீரபுராவைச்ச சேர்ந்த காவலர் கிஷோர் (32)) என்பவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி திருமணம் நடந்தது. பிரதீபாவின் தந்தை பெட்டகலசூர் கிராம பஞ்சாயத்தின் செயலாளர் ஆவார். பிரதீபா பிஇ கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்தவர் ஆவார்..

இதனிடையே பிரதீபாவிற்கு நண்பர்கள் வட்டாரம் மிக அதிகமாம்.. அதனால் திருமணம் ஆனதில் இருந்தே மணிக்கணக்கில் செல்போனில பேசி வந்தாராம். இதனால் அடிக்கடி தம்பதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே கர்ப்பமான பிரதீபா கடந்த சில மாதம் முன்பு தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார்.. இந்நிலையில பிரதீபாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.. தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த பிரதீபாவிற்கு, அவரது கணவர் கிஷோர் ஞாயிறு இரவு அன்று அழைத்துள்ளார்.. ஒரு முறை அல்ல.. இருமுறை அல்ல.. தொடர்ந்து 150 முறை செல்போனில் பேசுவதற்காக அழைத்துள்ளாராம்.

ஆனால் பிரதீபா போனை எடுக்க வில்லை என்று சொல்லப்படுகிறது.. தொடர்ந்து போன் வெயிட்டிங்கிலேயே இருந்தால் ஆத்திரம் அடைந்த கிஷோர், சாம்ராஜ் நகரில் இருந்து கோஷ் கோட்டில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு 230 கிமீ தூரம் பயணித்து சென்றார்.. அங்கு வீட்டிற்கு ஆத்திரத்துடன் சென்று , எதுவுமே கேட்காமல் மனைவி பிரதீபாவை கண் இமைக்கும் நேரத்தில கழுத்தை துப்பட்டாவால் நெருக்கி கொலை செய்தார்..

தொடர்ந்து தனது சட்டை பையில் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பூச்சி மருந்தை குடித்ததும் மயங்கி விழுந்த காவலர் கிஷோரை அவரது, அக்கம் பக்கத்தினர் மீட்டு சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சாம்ராஜ் நகர் போலீசார் கிஷோரை கைது செய்தனர். மருத்துவனையில் சிகிக்கையில் உள்ளதால், சிகிச்சை முடிந்து குணம் அடைந்ததும் விசாரணை அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்..
இதனிடையே பிரதீபாவின் தந்தை சுப்பிரமணி, தனது மகளை காவலர் கிஷோர், வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications