'காந்தாரா வேடம்' ஆவேசமாக நடனம் ஆடும்போதே..சரிந்து விழுந்த கலைஞர்..நடிப்பு என நினைத்த மக்கள்..சோகம்!
பெங்களூர்: கர்நாடகாவில் காந்தாரா வேடம் அணிந்து ஆவேசமாக ஆடிய கலைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். தெய்வீக நிகழ்ச்சியை கண்டு கொண்டு இருந்த மக்கள், காந்தாரா படத்தில் போன்றே இருப்பதால் நடிப்பு என முதலில் நினைத்தனர். ஆனால், சில நிமிடங்கள் ஆகியும் அவர் எழுந்து இருக்கவில்லை. அதன்பிறகே அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய 'காந்தாரா' திரைப்படம் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக பான் இந்தியா முறையில் மற்ற மொழிகளிலும் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

காந்தாரா திரைப்படம்
காந்தாரா திரைப்படத்தில் துளு நாடு அதாவது மங்களூர், உடுப்பி போன்ற தெற்கு கர்நாடக கடலோர பகுதிகளில் வழிபடக்கூடிய கிராமப்புற தெய்வ வழிபாடு காட்டப்பட்டு இருக்கும். இந்த படத்தில் அமைக்கப்பட்டு இருந்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்து இருந்தன. குறிப்பாக இந்த படத்தில் 'பூதகோலா' படம் பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதியும் வகையில் இருந்தது.

மாரடைப்பால் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்தில் பூதாகோலா போன்று யக்சகாணா எனப்படும் தெய்வீக கலைநிகழ்ச்சியும் நடைபெறுவதும் வழக்கம். அதுபோன்று ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அந்த நிகழ்வில் தெய்வ வேடம் அணிந்து நடித்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:- தட்சினகன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா எடமங்கலா அருகே உள்ள இட்யகா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காந்து அஜிலாமூலங்கிரி.

ஆவேசமாக நடனமாடினார்
இவர் அந்த பகுதிகளில் தெய்வீக கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் அருள் வாக்கு சொல்லுவார் என்று சொல்லப்படுகிறது. மற்றும் பக்தர்களுக்கு ஆசியும் வழங்குவார். இந்த யக்சகாணா தெய்வீக நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு அஜிலாமூலங்கிரி நடனமாடிக் கொண்டு இருந்தார். பக்தி பரவசத்தில் ஆவேசமாக நடனமாடிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.

நடிப்பு என நினைத்த மக்கள்
தெய்வீக நிகழ்ச்சியை கண்டு கொண்டு இருந்த மக்கள், காந்தாரா படத்தில் போன்றே இருப்பதால் நடிப்பு என முதலில் நினைத்தனர். ஆனால், சில நிமிடங்கள் ஆகியும் அவர் எழுந்து இருக்கவில்லை. அதன்பிறகே ஓடிச்சென்று பார்த்தனர். சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே மாரடைப்பால் காலமாகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தெய்வீக கலைநிகழ்ச்சியின் போது அந்த தெய்வீக கலை நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவரே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications