தக் லைஃப் படத்தை இதுக்காகவா தடை செய்வாங்க? பேசாம கமல் மன்னிப்பு கேட்கலாமே! குழப்பும் திவ்யா ஸ்பந்தனா
பெங்களூர்: தமிழில் இருந்து கன்னடம் பிறக்கவில்லை, அதற்காக தக் லைஃப் படத்தை தடை செய்வதா? இதெல்லாம் ஓவர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கலாம் என கர்நாடகாவை சேர்ந்த தமிழ் நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். அவர் கமலுக்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா என்ற நிலைப்பாடு புரியவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை எல்லாம் திராவிட மொழிகள் என்ற அர்த்தத்தில்தான் கமல்ஹாசன் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.

நாமெல்லாம் ஒரே மொழியை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்டுத்தான் அவர் பேசியிருந்திருப்பார். அதற்காக தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் தடை செய்வதா. இது மன்னிக்கக் கூடியதுதான் என தெரிவித்துள்ளார்.
அன்பு
இதற்கு நெட்டிசன் ஒருவர், "அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது" என கமல்ஹாசன் தெரிவித்ததை கமென்ட்டாக போட்டார். அதற்கு திவ்யா ஸ்பந்தனா, "இந்த கருத்தில் நான் மாறுபடுகிறேன். அன்பில் எந்த அகங்காரமும் இல்லாமல் ஒருவர் மன்னிப்பு கேட்பது எளிது" என திவ்யா பதிலளித்துள்ளார்.
கமல்ஹாசன்
இவரது இந்த கருத்து கமல்ஹாசனுக்கு ஆதரவா இல்லை கன்னட அமைப்புகளுக்கு ஆதரவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அது போல் எந்த மொழியில் இருந்து எது பிறந்தது என்பது குறித்து ஒரு விளக்க படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தக் லைஃப்
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய மொழி சார்ந்த கருத்துகள் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமார் குடும்பம் எனது குடும்பம். அவர் எனக்காக இங்கு வந்திருக்கிறார்.
உயிரே உறவே
இதனால்தான் நான் எனது பேச்சை தொடங்க உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழில் இருந்து தோன்றியதுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன் என தெரிவித்தார். கமலின் இந்த மொழி பேச்சுக்கு சிவராஜ்குமார் தலையாட்டி ஆமோதித்தார்.
கர்நாடகாவில் சர்ச்சை
கமல்ஹாசன் பேசிய பேச்சு கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவோ, கமல்ஹாசன், கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என கண்டனம் தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்க மறுப்பு
மேலும் கமல்ஹாசனோ மன்னிப்பு கேட்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார். இதனால் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்களும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசனை கண்டித்தனர். இந்த நிலையில் சிவராஜ்குமாரோ கமலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவருக்கும் கர்நாடகாவில் கண்டனங்கள் வலுத்துள்ளன.
கன்னட மொழி
சிவராஜ்குமார் பேசுகையில், கன்னட மொழி மீது பெங்களூரு மாநகரின் மீதும் கமல்ஹாசன் மிகுந்த மதிப்பு கொண்டவர். நான் அவருடைய பெரிய ரசிகன். இந்தவிவகாரம் குறித்து 100 சதவீதம் உரிய விளக்கத்தை கொடுப்பார். கன்னட மொழியின் மீதான பாசம் என்பது வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும்.
கேமரா
எங்கு சென்றாலும் கன்னடத்தை நேசிக்க வேண்டும். கேமரா முன்பாக மட்டும் நேசிக்க கூடாது. வெறும் பேச்சுக்காக கன்னட பாசத்தை கேமரா முன்பாக காட்ட கூடாது. இங்கே கன்னடத்துக்காக பேசுவதாக சொல்பவர்கள் கன்னட திரையுலகுக்கு என்ன செய்தார்கள் என யோசித்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார். கமல்ஹாசனோ அன்பு என்றைக்கும் மன்னிப்பு கேட்காது என தெரிவித்திருந்தார்.
I think what @ikamalhaasan meant was Kannada, Tamil, Telugu and Malayalam are all Dravidian languages- we have shared linguistic ancestry and commonality. But to boycott is a bit much no? A faux pas is excusable. pic.twitter.com/3MNYCDo3Sn
— Ramya/Divya Spandana (@divyaspandana) May 29, 2025
யார் இந்த திவ்யா
திவ்யா ஸ்பந்தனா, பெங்களூரை சேர்ந்த நடிகை. இவர் தமிழில் குத்து எனும் படத்தில் சிம்புவுடன் நடித்துள்ளார். இதனால் இவர் குத்து ரம்யா எனும் அழைக்கப்பட்டார். இந்த நிலையில் தனது பெயரை திவ்யா ஸ்பந்தனா என மாற்றிய நிலையில் தன்னை யாரும் குத்து ரம்யா என அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்பி
இவர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியின் எம்பியானார். இதையடுத்து 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. எனினும் காங்கிரஸில் முக்கியத்துவம் அவருக்கு இருந்தது. தனது பணிகளை காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பதாக 2018 ஆம் ஆண்டு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications