கர்நாடகா முதலமைச்சர் பதவி ஒப்பந்தம் – முதல்முறையாக மனம் திறந்த டி.கே. சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் நவம்பர் புரட்சி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே அதிகார போட்டி நிலவி கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பதவிக்காக இருவரும் பல்வேறு அஸ்திரங்களை கையில் எடுத்து வருகிறார்கள். ஆனால் பொதுவெளியில் அதை வெளிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் முதல்முறையாக முதலமைச்சர் பதவிக்கு நடைபெற்ற ஒப்பந்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அந்த வெற்றியை கொண்டாடுவதற்குள் அங்கு முதலமைச்சர் பதவியை யார் பிடிப்பது என்று சித்தராமையா, டி.கேசிவக்குமார் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட கூடாது என்று யோசித்த காங்கிரஸ் தலைமை இதற்காக ஒரு ஒப்பந்தம் போட்டது.

கர்நாடகா முதலமைச்சர் பதவி
அதன்படி 5 வருட காங்கிரஸ் ஆட்சியில் முதல் 2.5 வருடங்கள் சித்தராமையாவும், அடுத்த 2.5 வருடங்கள் டி.கே சிவக்குமார் முதலமைச்சர் பதவியில் இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 2025 நவம்பர் மாதத்துடன் காங்கிரஸ் ஆட்சியின் முதல் 2.5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.
இதன் காரணமாக கர்நாடக அரசியலில் நவம்பர் புரட்சி வெடிக்க போகிறது, அரசியலில் பெரிய மாற்றம் இருக்க போகிறது என்று வெளியாகும் தகவல்களால் கடந்த சில வாரங்களாக கர்நாடகா அரசியல் உச்சகட்ட பரபரப்பில் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக சித்தராமையாவும், முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காக டி.கே சிவக்குமாரும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
உச்சகட்ட பரபரப்பு
டி.கே. சிவக்குமார் தன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்குவது, டெல்லி சென்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வை சந்தித்து சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த செயல்களால் கோபமடைந்த சித்தராமையா, நவம்பர் புரட்சி எல்லாம் ஒன்றுமில்லை. இது ஊடகங்கள் கட்டமைத்த கட்டுக்கதை என்றார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த சித்தராமையா, தன்னை முதலமைச்சராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சனையில் எங்கள் கட்சி உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும் என்று கார்கே நழுவிட்டார். விரைவில் சித்தராமையா, டி.கே சிவக்குமாரை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி இதில் முடிவு எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகா காங்கிரஸ் முதலமைச்சர் ரேஸில் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என இதைக் கண்டித்து கர்நாடகா பாஜக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
உடைத்த டி.கே சிவக்குமார்
இத்தனை நாட்களாக சித்தராமையாவை எதிர்க்கவில்லை. கட்சி நலன் தான் முக்கியம் என்று கூறி வந்த டி.கே சிவக்குமார் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதலமைச்சர் விவகாரம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க உடன்பாடு இல்லை. 2023 ஆம் ஆண்டு எங்களில் ஒரு சிலருக்குள் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. அதைப்பற்றி வெளியில் யாருக்கும் தெரியாது.
நான் எனது மனசாட்சியை நம்பி செயல்படுபவன். எந்த காரணத்திற்காகவும் கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. கட்சி என்ன சொல்கிறதோ அதன்படி ஒற்றுமையாக செயல்படுவோம். 2028 கர்நாடகா சட்டமன்ற தேர்தல், 2029 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியம். அதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்." என்றார். அவரின் இந்த கருத்து கர்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications