கர்நாடக தேர்தல்.. மொத்த தொகுதிகள் எத்தனை.. கடந்த தேர்தல் வெற்றி கட்சிவாரியாக இதோ
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் நிலையில் அங்குள்ள கட்சிகளின் தற்போதைய பலம் என்ன என்பதை பார்ப்போம்.
கர்நாடகாவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. ஜெயாநகர், ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய இரு தொகுதிளுக்கும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்தலில் பெரும்பான்மை பலம் 112 ஆகும். ஆனால் தேர்தலில் பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 80 இடங்களிலும் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 37 இடங்களிலும் வென்றது. இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது.

அவசரம்
இதையடுத்து அவசரமாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, கூட்டணி அமைத்து பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் 80 இடங்களில் வென்றிருந்தாலும் ஜேடிஎஸ்ஸை அணுகி நாங்கள் உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். நீங்களே முதல்வராக இருங்கள். நாம் கூட்டணி ஆட்சியை நடத்தலாம் என தெரிவித்திருந்தார்.

அதிக இடங்களில்
இதனிடையே பாஜக அதிக இடங்களில் வென்றதால் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் முதல்வராக எடியூரப்பாவும் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றம் வரை சென்றன. இதையடுத்து எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தார் ஆளுநர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றமும் வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிட்டிருந்தது. எனினும் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து பதவியேற்ற 3 நாட்களில் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜேடிஎஸ் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதன் பேரில் சட்டசபையில் பெரும்பான்மையை குமாரசாமி நிரூபித்தார். பின்னர் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

பாஜக சதி
எனினும் தனது ஆட்சியை கலைக்க பாஜக சதி செய்வதாக பல முறை அப்போதைய முதல்வர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் குமாரசாமியின் ஆட்சி ஓராண்டு நிறைவடைந்தது. அதில் மஜத (ஜேடிஎஸ்)- காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

சட்டசபையில் பெரும்பான்மை
இதையடுத்து மீண்டும் சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது பாஜகவின் பலம் 122 ஆக இருந்தது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சிக்கு வந்தார். பின்னர் அவருடைய வயது மூப்பு காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்று தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறார்.

224 தொகுதிகளுக்கு போட்டி
கர்நாடகா சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு வழக்கம் போல் மும்முனை போட்டி நிலவி வருகிறது. அந்த 3 கட்சிகளுடன் தற்போது ஆம் ஆத்மியும் சேர்ந்துவிட்டது. இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இப்படியிருக்கும் போது கர்நாடகா சட்டசபையில் பாஜகவின் தற்போதைய பலம் 119 ஆகும். அது போல் காங்கிரஸ் கட்சியின் பலம் 75 ஆகும். கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.

பிரச்சாரம்
தற்போது நடைபெறும் தேர்தலில் எந்த கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என கூறி வரும் நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சியாவது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்குமா இல்லை கடந்த முறை போல் தொங்கு சட்டசபை அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications