மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கியும்.. கணவரிடம் ரூ.3 கோடி ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. பெங்களூர் கொடூரம்
பெங்களூர்: பெங்களூரில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் தற்கொலை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக அவரின் மனைவி நிகிதா சிங்காரியாவின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார்.
மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரின் மனைவி நிகிதா சிங்காரியாவின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
1. நிகிதா சிங்கானியா பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அவரின் மாத சம்பளம் 1.20 லட்சம். வருமான வரி போக 1.10 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்.
2. அவர் திருமணத்தின் போது ஒரு ரூபாய் கூட வரதட்சணை கொடுக்கவில்லை. தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அதே சமயம் அவர் தனது கணவர் அதுல் சுபாஷிடம் விவாகரத்தின் போது 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார்.
3. மேலும் 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு கேட்டு கோர்ட் மூலமாக 2 லட்சம் ரூபாய் பராமரிப்பு பெற ஒப்புக்கொண்டுள்ளார். விவாகரத்து நடக்கும் முன்பு வரை.. கணவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்று வந்துள்ளார்.
4. இதெல்லாம் போக கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளார். கணவரை கடந்த சில வருடங்களாக கடுமையாக கொடுமை செய்துள்ளார்.
5. சுபாஷ் மீது கொடுமை படுத்தியதாக புகார் வைத்துள்ளார்.
6. சுபாஷுக்கு வீடு கடன் இருந்துள்ளது. தனது அப்பாவின் கடன் இருந்துள்ளது. இதை எல்லாம் அடைத்த சுபாஷ்... சொந்தமாக வீடு வாங்கி அதற்கும் இஎம்ஐ காட்டியுள்ளார். இது எதற்கும் மனைவி உதவவில்லை.
7. அதே சமயம் மனைவி நிகிதாவின் சகோதரர் பிஸ்னஸ் செய்ய சுபாஷ் உதவி உள்ளார். நிகிதா குடும்பத்திற்கு நிதி உதவி செய்துள்ளார்.
8. இப்போது விவாகரத்து தொல்லை, வழக்கிற்கு இடையே கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவில் சட்டங்கள் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் உண்மையில் நீதி கிடைக்க வேண்டிய ஆண்களுக்கும் நீதி கிடைப்பது இல்லை என்று தற்கொலை வீடியோவில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications