Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவெல்லாம்.. பெட்ரூமில் அழுது.. கூடை கூடையாக பணம் வேணும்.. சாக தைரியம் இல்லை.. நீ போயிட்டியா பிரேமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வக்கீல் பிரேம குமாரி எழுதிய 5 பக்க கடிதம் ஒன்று, கர்நாடகாவையே கதிகலங்க வைத்து வருகிறது.. என்ன நடந்தது?

பெண்கள் அதிக அளவு படித்த மாநிலம் கேரளா.. கல்விக்கென முக்கியத்துவம் தரப்படும் முதன்மை மாநிலமும்கூட.. கடவுளின் தேசம் என்று புகழப்படும் இந்த கேரளாவில்தான், பெண்களுக்கு எத்தனை எத்தனை வரதட்சணை கொடுமைகள்?? எத்தனை எத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன???

Do you know who is Mandya Prema Kumari what did Karnataka woman write 5 page letter about her Husband

வரதட்சணை பிரச்சனையால், கடந்த வருடம்கூட, இளம்பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதோ கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் ஒரு கொடுமை நடந்துள்ளது..

வரதட்சணை:
கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேமகுமாரி.. 26 வயதாகிறது. இவருக்கும் மைசூரை சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும், கடந்த 2022-ல் கல்யாணம் நடந்தது.. அப்போது பிரேமகுமாரி வீட்டில், 150 கிராம் தங்கம், 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக தந்திருக்கிறார்கள். ஆனால், மாப்பிள்ளை வீட்டிலோ, கல்யாணம் ஆகி 3 மாதங்களில் வரதட்சணை பிரச்சனை வெடித்தது..

பிரேமகுமாரியை கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ரூ.64 லட்சம் தராவிட்டால், வீட்டில் இடமில்லை என்று பிரேமகுமாரியை, அவரது வீட்டுக்கு அடித்து துரத்தியிருக்கிறார்கள்..

அவமானம்: வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை கொண்டவர் பிரேகுமாரி.. மாமியார் வீட்டில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பிறகு, நன்றாக படித்து வழக்கறிஞராக வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார்.. அதற்காக கடும் முயற்சி எடுத்து படித்தார்.

ஆனால், வரதட்சணை வாங்கி வராமல், அம்மா வீட்டிலேயே பிரேமகுமாரிக்கு தங்கிவிட்டதால், மாமியார் வீட்டிலிருந்து கொலை மிரட்டல் வந்ததாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் பிரேமகுமாரி.. நேற்று தன்னுடைய வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அதற்கு முன்பு, பிரேமகுமாரி 5 பக்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்.

கடிதம்: அதில், "வழக்கறிஞராக வேண்டும் என்ற என் கனவு நனவாகியுள்ளது. ஆனால், என்னுடைய கணவருடைய கோபத்தை என்னால் தாங்க முடியவில்லை. எந்நேரமும் பயத்துடனேயே வாழ்க்கை நடத்துவது போல இருக்கிறது. நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றி விட்டார்கள்.. பணக்கார வீட்டு பெண்ணான எனக்கு சாக தைரியம் இல்லை, ஆனால், வாழவும் ஆசை இல்லை" என்று எழுதியிருக்கிறார் பிரேமகுமாரி. இது தொடர்பாக கிக்கேரி போலீசார், ராகவேந்திரா குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறார்கள்.

பிரேமகுமாரியை போலவே, 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவிலும் ஒரு பெண் இப்படித்தான் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில், அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தவர் ஷஹ்னா.. மிகவும் ஏழ்மையான குடும்பம்.. இவருக்கு அப்பா இல்லை.. தன் மகளை கஷ்டப்பட்டுதான் டாக்டருக்கு படிக்க வைத்தார் ஷஹ்னாவின் அம்மா.

தீவிர காதல்: ஷஹ்னா தன்னுடன் பணிபுரியும் சக டாக்டரை விரும்பியிருக்கிறார். இருவருமே தீவிரமாக காதலித்து வந்த நிலையில், 150 சவரன் தங்கம், 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் இதெல்லாம் வரதட்சணையாக வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டில் கேட்டார்களாம்.

தன்னிடம் அந்த அளவுக்கு வசதி இல்லை என்று ஷஹ்னா கெஞ்சியும்கூட, மாப்பிள்ளை வீட்டில் மனம் இரங்கவில்லை. இறுதியில்,
ஆபரேஷன் செய்யும்போது, நோயாளிகளுக்கு செலுத்தும் மயக்க ஊசியை, தானே செலுத்திக் கொண்டு ஷஹ்னா தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பு ஷஹ்னா ஒரு கடிதம் எழுதிவைத்திருந்தார்.

மரியாதை: அதில், "இந்த உலகத்தில் அன்பிற்கு, எந்த மரியாதையும் கிடையாது... என் அப்பா போய் விட்டார். கல்யாணத்துக்கு வரதட்சணை கொடுக்க, கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இங்கில்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் இங்கு தேவையாக இருக்கிறது" என்று எழுதியிருந்தார்.

படித்த பெண்களே ஆனாலும், வரதட்சணை என்ற பேய்க்கு பலியாகிவிடுகிறார்கள்.. "இந்த உலகத்தில் அன்பிற்கு, எந்த மரியாதையும் கிடையாது" என்று டாக்டர் ஷஹ்னா எழுதி வைத்ததில்தான் எவ்வளவு பெரிய உண்மை????

ஷஹ்னா போல டாக்டராக இருந்தால் என்ன? பிரேம குமாரி போல வக்கீலாக இருந்தால் என்ன? உயிருக்கு உயிரான காதலே என்றாலும், உருகி உருகி அன்பையே கொட்டினாலும், கடைசியில் பணம்தான் இங்கு வெற்றி பெறுகிறது போலும்????

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+