கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. பொக்லைன் டிரைவர் எடுத்த விபரீத முடிவு.. எல்லாமே முடிஞ்சு போச்சே
பெங்களூர்: கர்நாடகாவில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியால் மனம் நொந்துப்போன டிரைவர் விபரீத முடிவை எடுத்தார். இதனால் அவரது உயிர் பிரிந்தது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிப்புரா தாலுகா ஹொன்னாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 38). இவர் பொக்லைன் இயந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

ரவியின் ஊருக்கு அருகே உள்ள கிராமத்தின் பெயர் அருவனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த லாவண்யாவுக்கும், ரவிக்கும் திருமணம் முடிந்தது.
இவர்கள் 2 பேருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இருவரும் பாசத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இதற்கிடையே தான் அவர்களின் வாழ்க்கையில் பூகம்பம் வர தொடங்கியது. அதாவது அதே கிராமத்தை சேர்ந்த ரவியின் உறவினர் பிரதீப் என்பவருடன் லாவண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
லாவண்யா - பிரதீப் ஆகியோர் முதலில் சாதாரணமாக பழகினர். அதன்பிறகு இருவருக்கும் இடையேயான பந்தம் நெருக்கமானது. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. கணவர் ரவிக்கு துரோகம் செய்யும் வகையில் பிரதீப்புடன், லாவண்யா பழகினார். அதோடு ஒரே கிராமம் மற்றும் உறவுக்காரர் என்பதால் ரவி இல்லாத சமயத்தில் லாவண்யாவின் வீட்டுக்கு அடிக்கடி பிரதீப் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே தான் இந்த கள்ளக்காதல் விவகாரம் ரவிக்கு தெரியவந்தது. அதை கேள்விப்பட்டதும் அவர் உடைந்து போனார். மனைவி லாவண்யா, பிரதீப் ஆகியோரை கண்டித்தார். இருவரிடமும் கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் அவர்கள் கள்ளக்காதலை விடவில்லை. தொடர்ந்து தனிமையில் சந்தித்தனர்.
இதனால் லாவண்யா - ரவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமான லாவண்யா தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றவர் கள்ளக்காதலன் பிரதீப் உடன் எஸ்கேப் ஆனார். இதற்கிடையே லாவண்யா, பிரதீப்புடன் ஓடிப்போன விவகாரம் ஊரில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. இதனால் ரவி தனது மானம் போனதாக உணர்ந்து மனம் உடைந்து காணப்பட்டார்.
இதற்கிடையே ரவி கடந்த 4ம் தேதி திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். அவரை குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இப்படியான சூழலில் தான் நேற்று அவரது உடல் மாவினகெரே அருகே ஹேமாவதி ஆற்றில் மிதந்தது. இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டனர்.
மனைவி, கள்ளக்காதலனுடன் ஓடியதால் வாழ்க்கையை வெறுத்த ரவி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் ரவியின் சகோதரி, தனது சகோதரரை லாவண்யா, பிரதீப் ஆகியோர் கொன்று உடலை ஆற்றில் வீசி உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications