"ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" மோதல்- பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்களை ரிலீஸ் செய்தது யார்?
பெங்களூர்: 300 பெண்களுடன் 3000 ஆபாச வீடியோக்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா சிக்கிய விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார் என்பதுதான் இந்த சர்ச்சை.
பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசன் தொகுதியில் போட்டியிட்டவர் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பிரஜ்வல்தான்.

ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் முன்னரே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கசியவிடப்பட்டு பெரும் பிரளயமே வெடித்தது. தற்போது ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ரேவண்ணா. இந்த வீடியோக்கள் குறித்து எஸ்ஐடி விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை கசியவிட்டது யார் என்ற விவாதம் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. யார் யார் என்ன கருத்துகளை தெரிவித்துள்ளனர் என்பதன் தொகுப்பு:
கார்த்திக் கவுடா (பிரஜ்வல் ஓட்டுநர்): பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்களுடனான பென் டிரைவ்வை நான் பாஜகவின் தேவராஜே கவுடாவிடம்தான் கொடுத்தேன். எனக்கு எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் தெரியாது. எந்த ஒரு காங்கிரஸ் தலைவரை சந்தித்தும் நான் பென் டிரைவ்வை கொடுக்கவே இல்லை.
தேவராஜே கவுடா (பாஜக): கார்த்திக் கவுடாதான் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார். அவர்தான் இந்த வீடியோக்களை காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக வெளியிட்டிருக்கிறார். பாஜக கூட்டணியின் வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த நான் வீடியோக்களை வெளியிடுவேனா? இந்த வீடியோக்களால் உடனடியான அரசியல் ஆதாயம் என்பது ஹாசனில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் பட்டேலுக்குதான். கார்த்திக் கவுடாதான் ஸ்ரேயாஸுடன் நெருக்கமாக இருந்தார்.
குமாரசாமி (முன்னாள் முதல்வர், பிரஜ்வல் சித்தப்பா): வீடியோக்களை ரிலீஸ் செய்த மகாநாயக் (துணை முதல்வர் டிகே சிவகுமார்) பெண்களின் முகங்களை ப்ளர் செய்து வெளியிட்டிருக்கலாம். அந்த பெண்கள் குடும்பம் என்ன பாடுபடும்? இதுதான் டிகே சிவகுமார், பெண்களை மதிக்கும் இலட்சணம். இத்தகைய டிகே சிவகுமாரை தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் இருந்து உடனடியாக சித்தராமையா நீக்க வேண்டும்.
டிகே சிவகுமார் (துணை முதல்வர்): இப்படியான கீழ்த்தரமான அரசியல் செய்வது எங்களுக்குப் பழக்கமில்லாதது. நாங்கள் நேரடியாகத்தான் மோதுவோம். என்னிடம் பென் டிரைவ் இருக்கிறது; சிடி இருக்கிறது என குமாரசாமி போல ப்ளாக் மெயில் செய்கிறவர்கள் நாங்கள் இல்லை. பிரஜ்வல் தந்தை ரேவண்ணாவே இது பழைய வீடியோக்கள் என ஒப்புக் கொண்ட பின்னர் நாங்கள் எங்கே போய் ரிலீஸ் செய்திருப்போம்? எங்க ரத்தத்தில் அப்படி எல்லாம் கீழ்த்தரமான அரசியல் இருந்ததே இல்லை.
டிகே சுரேஷ் ( டிகே சிவகுமார் தம்பி, காங்கிரஸ் வேட்பாளர்): எங்களிடம் வீடியோக்கள் கிடைத்திருந்தால் ரொம்ப காலத்துக்கு முன்னரே நாங்கள் பகிரங்கப்படுத்தி இருப்போம். ஆதாரமே இல்லாமல் எதையும் பேசுபவர்கள் நாங்கள் அல்ல.
விஜயேந்திரா (கர்நாடகா பாஜக தலைவர்): பாஜகவின் தேவராஜே கவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவின் 2976 வீடியோக்கள் குறித்து எனக்கு எந்த ஒரு கடிதமும் எழுதவில்லை. அவர் ஏன் அப்படி சொல்கிறார் என எனக்கும் தெரியவில்லை.
சாமீ! எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மோடுதான்!
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications