போச்சே.. சாப்பாடு, காய்கறின்னு எல்லாத்தையும் பார்சல் போடுவோமே! 75% ஊழியர்களை நீக்கியது டன்சோ கம்பெனி
பெங்களூர்: பெங்களூரை தலைமையிடமாக கொண்ட டெலிவரி நிறுவனமான டன்சோ (Dunzo) நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக செலவுகளைக் குறைத்து, நிதி ஆதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டு, தனது ஊழியர்களில் 75% (150 பேர்) பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
மளிகைப்பொருட்கள் டெலிவரி, சமையல் செய்து தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்தல், காய்கறி, மட்டன், சிக்கன் என பல விஷயங்களையும் சிட்டிக்குள்ளேயே டெலிவரி செய்ய டன்சோ பயன்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது.

டன்சோ நிறுவனம் மீதுள்ள நிதி பிரச்சினைகளை சமாளிக்க போராடும் நிலையில், செலவுகளைக் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்க புது வியூகங்களை கையில் எடுத்துள்ளது. இதன் காரணமாக, இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் உள்ள நிலுவைத் தொகைகளை செலுத்துவதில் சிக்கல் இருந்ததே இதற்கான முக்கிய காரணம்.
வேலைவாய்ப்பு இழப்பைக் கண்காணிக்கும் ஒரு இணையதளத்தின் தகவல்படி, இந்த பணி நீக்கம் ஆகஸ்ட் 31, 2024 அன்று செய்யப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு தேவையான நிதி கிடைத்ததும், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிலுவை சம்பளங்கள், சர்வீஸ் கட்டணம், விடுப்பு பணம் மற்றும் பிற பாக்கித் தொகைகள் செலுத்தப்படும் என்று டன்சோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
டன்சோ நிறுவனம் பல மாற்றங்கள் மற்றும் சவால்களைச் சந்தித்துள்ளது. ஒரு கட்டத்தில் $775 மில்லியன் மதிப்புடையதாக இந்த நிறுவனம் உருவெடுத்தது. ஆனால் சமீப காலங்களில் நிதி திரட்டுவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.
மே 2024 இல், புதிய மற்றும் தற்போதுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு மற்றும் கடன் ஆகியவற்றின் கலவையாக ₹22-25 கோடி நிதி திரட்டும் தருவாயில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஒப்பந்தம் கைகூடவில்லை. நிதி திரட்டும் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் 10-15 நாட்களுக்குள் நிலுவைத் தொகைகளைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் டன்சோ நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கடுத்த மின்னஞ்சல்களை வைத்து பார்த்தால் நிதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் லாபகரமான வளர்ச்சிக்காகவும், இதுபோன்ற சவாலான காலகட்டங்களை எதிர்கொள்ளவும் இது அவசியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. டன்சோ நிறுவனம் இந்த நிதி சிக்கல்களில் இருந்து மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications