சொத்துகளை விற்க E - Khata கட்டாயம்.. செப்டம்பர் 30ம் தேதி முதல் அமல்.. வெளியான முக்கிய தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் வரும் 30ம் தேதி முதல் சொத்து பதிவு செய்வதற்க இ-கட்டா (E Khata)என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்க இந்த புதிய நடைமுறை மாநிலம் முழுவதும் வரும் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவரது அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடா செயல்பட்டு வருகிறார்.

கர்நாடகாவை பொறுத்தவரை பல இடங்களில் பத்திரப்பதிவு தொடர்பான மோசடி, முறைகேடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளியூரில் வசிப்பதால் சிலர் முறைகேடு செய்து நிலத்தை அபகரித்து விடுகின்றனர்.
அதாவது நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமலே இன்னொருவருக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் சொத்துகளை பதிவு செய்ய இ- கட்டா (E Khata) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறியதாவது: கர்நாடகாவில் சொத்துகளை பதிவு செய்ய இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை என்பது செப்டம்பர் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சொத்து பதிவு செய்யும்போது நடக்கும் மோசடி, முறைகேடுகளை தடுக்க இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை என்பது சோதனை அடிப்படையில் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட்டை, சாமராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பத்திரப்பதிவுக்கு இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் கிராமங்கள் என்றால் E - Swathu மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நகரங்கள் என்றால் E-Aasthi மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் வரும் 30ம் தேதி முதல் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் E-khatas கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துகளை விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோர் இ-கட்டா கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். E Swathu, E Aasthi என இரண்டும் மாநில பதிவுத்துறை செயல்முறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி E Khata இன்று எந்த சொத்துகளும் பதிவு செய்ய முடியாது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications