கண்ட இடத்தில் தொட்டு பெண்ணிடம் அநாகரீகம்.. வயதானவரின் அடையாளம் தெரிந்தது.. போலீஸ் தேடியதும் எஸ்கேப்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல மாலில் வைத்து பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட வயதான நபரின் அடையாளம் தெரிந்தது. ஓய்வு பெற்ற ஹெட்மாஸ்டர் ஆன அந்த நபர் போலீசார் தேடுவதை அறிந்தது வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடியிருக்கிறார்.
பெங்களூரில் உள்ள பிரபல மாலில் வைத்து பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட வயதான நபரின் அடையாளம் தெரிந்தது. ஓய்வு பெற்ற ஹெட்மாஸ்டர் ஆன அந்த நபர் போலீசார் தேடுவதை அறிந்தது வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

பெங்களூரில் பிரபலமான லூலூ மாலில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிரவைத்தது. மாலில் உள்ள கேம் சென்டரில், இளம் பெண் ஒருவர் நீல நிற உடையில் நின்று கொண்டிருக்கிறார். பின்னாடியே கண்ணாடி அணிந்தபடி வந்த வயதானவர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் பின்னால் சென்று உரசி, சில வினாடிகள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து செல்கிறார்.
13 வினாடிகள் உள்ள இந்த வீடியோ பார்ப்பவரக்ளை அதிரவைத்தது. அந்த பெண் சிறுமியா அல்லது பெரிய பெண்ணா என்பது சரியாக தெரியவில்லை.. அந்த பெண்ணின் முகம் தெளிவாக தெரியவில்லை.. வீடியோவில் அநாகரிகமாக நடந்து கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் பெங்களூர் மாநகர போலீஸை டேக் செய்து இருந்தனர். இதையடுத்து பெங்களூர் போலீசார் எந்த இடம், நடந்தது எப்போது என்று கேள்வி எழுப்பியதுடன், உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர்: இதையடுத்து, வழக்குபதிவு செய்த போலீசார், அநாகரிகமாக நடந்து கொண்ட முதியவரை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவராம். கடந்த 8 மாதங்களுக்கு முன் தான் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் தலைமறைவு ஆகிவிட்டாராரம். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
தலைமறைவு: "வீடியோவில் இடம் பெற்றிருந்த நபரின் வீட்டை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். ஆனால் அவர் வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரது வீடு பூட்டி கிடந்தது. அவர் இருக்கும் இடத்தை தற்போது தேடி வருகிறோம்" என்றனர். முன்னதாக சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ பரவி நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
நெட்டிசன்கள் பலரும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். வீடியோவை எடுத்த நபர் அளித்த தகவலின் பேரில் மால் நிர்வாகவும் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரை தேடியது. ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன்பிறகு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications