Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛இது சோசியல் மீடியாவின் பவர்’.. மகளை இழந்த தந்தை போட்ட ஒரு பதிவு.. போலீஸ்காரர்களுக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவக்குமாரின் ஒரே மகள் கடந்த மாதம் பெங்களூரில் மரணமடைந்தார். இதுதொடர்பான வழக்கில் இரக்கமே இல்லாமல் அவரிடம் போலீஸ்காரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் வாங்கினர். இதுதொடர்பாக சிவக்குமார் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் எஸ்ஐ மற்றும் போலீஸ்காரர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரை சேர்ந்தவர் கே சிவக்குமார். இவர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது ஒரே மகள் அக்சயா (வயது 34). மெட்ராஸ் ஐஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அகமதாபாத் ஐஐஎம் எம்பிஏ படிப்பை முடித்தார்.

bengaluru bribe police

கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) முதலீட்டு வங்கியில் பணியாற்றி வந்தார். 34 வயது நிரம்பிய நிலையில் கடந்த மாதம் அவர் காலமானார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக அக்சயா கடந்த செப்டம்பர் 18 ம் தேதி காலமானார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த வேளையில் ஆம்புலன்ஸ் டிரைவர், காவல்துறையினர், தகன மேடையில் வேலை செய்வோர், பெங்களூர் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் என அனைவரும் சிவக்குமாரிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக கே சிவக்குமார் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில்,
‛‛சமீபத்தில் நான் எனது ஒரேயொரு மகளை அவளது 34வது வயதில் இழந்தேன். என்னிடம் ஆம்புலன்ஸ் டிரைவர், எப்ஐஆர் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார், தகனமேடை ஊழியர்கள், இறப்பு சான்றிதழ்களுக்கு பெங்களூர் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் வெளிப்படையாக என்னிடம் லஞ்சம் கேட்டனர்.

எப்ஐஆர் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் நகல் வழங்க லஞ்சம் கேட்டனர். என் மகள் இறந்த 4வது நாளில் ஓபனாக லஞ்சம் கேட்டனர். போலீஸ் நிலையத்தில் வைத்து லஞ்சம் கொடுத்தேன். மகளை இழந்து துயரில் இருக்கும் ஒருவரிடம் பணம் கேட்கும்போது போலீஸ் அதிகாரிகளுக்கு குடும்பம் இருக்கிறதா அல்லது அவர்களுக்கு உணர்வுகள் இருக்கிறதா என்ற கேள்வி வருகிறது. என் மகளின் இறப்பு சான்றிதழ் வாங்க அதிகாரப்பூர்வமான கட்டணத்தை விட அதிக கட்டணத்தை மாநகராட்சி ஊழியர்கள் வசூலித்தனர் '' என்று கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த பதிவு வைரலானது. பலரும் போலீஸ்காரர், மாநகராட்சி ஊழியர்களை விமர்சனம் செய்தனர். இந்த புகாரை தொடர்ந்து பெங்களூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி பெல்லந்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீஸ்காரர் கோரக்நாத் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பெங்களூர் ஒயிட்பீல்டு போலீஸ் துணை கமிஷனர் எஸ் பரசுராமின் எக்ஸ் வலைதள பக்கம் உறுதி செய்துள்ளது. அந்த பக்கத்தில், ‛‛எந்த சூழலிலும் இதுபோன்ற அநாகரீகமான நடத்தையை காவல்துறை பொறுத்து கொள்ளாது. 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரிக்கைகள் தற்போது வலுக்க தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+