இந்திய கிரிக்கெட் மேட்ச் தான் முக்கியம்! 75 லட்சம் சம்பளம் வாங்கும் வரனை டீலில் விட்ட பெண்ணின் தந்தை
பெங்களூர்: டிவி சீரியல்கள் பார்க்கும் பெண்களை குறை சொல்லும் ஆண்களில் பலர் கிரிக்கெட் மேட்ச் என்றால் போதும் டிவியை விட்டு நகர மாட்டார்கள்.. இதற்கு பல உதாரணங்களை பார்த்திருப்போம். ஆனால், இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, இந்தியா இங்கிலாந்து போட்டியை பார்த்துக்கொண்டு, 70 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை தன்னை தொடர்புகொண்ட போது, பிறகு பார்க்கலாம் என்று தவிக்க விட்டிருக்கிறார் பெண்ணின் தந்தை.. இந்த சம்பவம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

75 லட்சம் ரூபாய் சம்பளம்: அதிலும் இந்தியா மோதிய போட்டி என்பதால் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தனர். சமுக வலைத்தளங்களிலும் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பதிவுகள் நிரம்பி வழிந்தன. சிலரோ சாப்பாட்டை கூட மறந்து கிரிக்கெட் போட்டியை பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதெல்லாம் கூட ஒகே.. ஆனால் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தில் ஒருவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை கூட தள்ளி வைத்து இருக்கிறார் என்றால் பாருங்களேன்.. அதுவும் வருஷத்துக்கு 75 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார். இது குறித்த சுவாரசிய தகவலை பார்ப்போம்..
பெங்களூர் மாப்பிள்ளை: பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராகுல். இவர் திருமணத்திற்கு வரன் தேடும் வெப்சைட் ஒன்றில் தனது பெயரை பதிவு செய்து பெண் தேடி வந்துள்ளார். இந்த வெப்சைட்டில் தான் எதிர்பார்க்கும் தகுதிகளோடு இருக்கும் பெண், இருந்தால் உடனே பெற்றோரை தொடர்பு கொண்டு தனது விருப்பதை பெற்றோரிடம் தெரிவிக்க முடியும்.
பிறகு பார்ப்போம் என பதில்: அதன்படி, ராகுலும் மேட்ரிமோனியலில் பார்த்த பெண் பிடித்து போகவே, அந்த ஐடியில் மெசேஜ் அனுப்பியுள்ளார். நான் தற்போது வருஷம், 70 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன். நான் மிகவும் பொருத்தமான தேர்வாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதிலளித்த பெண்ணின் தந்தையோ.. கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.. பிறகு பேசுவோம்" என்று கூறி முடித்து விட்டாராம்.
இணையத்தில் ட்ரெண்ட்: கவுரமான வேலை.. இவ்வளவு சம்பளம் வாங்கினாலும், பெண்ணின் தந்தையை கிரிக்கெட் போட்டியில் இருந்து கவனத்தை திசை திருப்ப போதுமானதாக இல்லை என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராகுல் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்: அப்படி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், மேட்ச் ரிசல்ட்க்கு ஏற்றார் போல்தான் அந்த தந்தை முடிவை எடுக்க போகிறார் என கலாய்த்துள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "எனது மகளுக்கு நாளைக்கு திருமணம் செய்து வைக்க முடியும். ஆனால், செமி பைனலை தள்ளிவைக்க முடியுமா?. அந்த பெண்ணின் தந்தை தனக்கு எது முன்னுரிமை என்பதில் தெளிவாக உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications