அப்பனா இவன்.. வெறித்தனம்.. காய்ச்சலுக்கு மாத்திரை கேட்ட மகள் சிக்கி சிதைந்த கொடுமை.. பெங்களூர் ஷாக்

பெற்ற மகளை தந்தையே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: "அப்பா, ஜுரம் அடிக்குது, மாத்திரை வேணும்" என்று கேட்ட பெற்ற மகளுக்கு, தூக்க மாத்திரையை தந்து பலாத்காரமும் செய்துள்ளார் ஒரு காம கொடூர தந்தை! இது நம் இந்தியாவில்தான் நடந்துள்ளது.

பெங்களூருவின் ஹரலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அவர்.. 19 வயசாகிறது.. இவருக்கு திடீரென ஜுரம் வந்துவிட்டது.. அத்துடன் பலமான இருமலும் சேர்ந்து கொண்டதால், தன் அப்பாவிடம் மாத்திரை வேண்டும் என்று உதவி கேட்டுள்ளார்.

Father rapes daughter after giving her sleeping pills near bengaluru

அந்த கேடு கெட்ட தகப்பனோ, காய்ச்சலுக்கு மருந்து தருவதாக சொல்லி, தூக்க மாத்திரைகளை மகளுக்கு தந்துள்ளார்.. மகள் மயங்கி விழுந்ததும், கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளார்.

மயக்கம் தெளிந்த பிறகுதான் விஷயம் புரிந்தது பெண்ணுக்கு.. காய்ச்சல் மாத்திரைகள் எனக்கூறி தூக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டு தான் வன்கொடுமைக்குள்ளானதை அறிந்துகொண்ட பெண், இதை பற்றி தனது சித்தி, அதாவது அப்பாவின் 2வது பொண்டாட்டியிடம் சென்று அழுதுள்ளார்.

உடனே சித்தியோ, சரி, சரி, இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேணாம் என்று சொல்லி சமாதானம் சொல்லி உள்ளார்.. இதனால் வெறுத்துபோய் மனமுடைந்த பெண், பாத்ரூம்முக்கு சென்று கெமிக்கலை எடுத்து குடித்துவிட்டு, பிறகு அப்படியே பக்கத்தில் இருந்த ஸ்டேஷனுக்கு சென்று அவராகவே புகார் அளித்துள்ளார்... பெண்ணின் நிலைமையும், அந்த புகாரையும் பார்த்து போலீசார் பதறி உள்ளனர்.

உடனடியாக அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்..,புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்துள்ளனர். உடனடியாக பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்... ஆனால் இந்த குற்றத்துக்கு அவரது மனைவியும் உடந்தையா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இப்போது அந்த ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருக்கிறாராம்... அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். ஆபத்தான கட்டத்தை தாண்டியபிறகுதான், அப்பெண்ணின் வாக்குமூலத்துக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+