டெல்லி வீரர்களின் திருடுபோன பேட்கள் மீட்பு! சிக்கிய 2 பேர்! ஆனாலும் வருத்தத்தில் வார்னர்! அச்சச்சோ
பெங்களூர்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் உள்பட பல வீரர்களின் பேட் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை திருடிய 2 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முக்கிய அப்டேட்டை வழங்கி உள்ளார். கைதானவர்களிடம் இருந்து பேட் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டாலும் கூட வார்னர் வருத்தம் ஒன்றையும் திடீரென தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் 16வது சீசன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பல்வேறு முக்கிய நகரங்களில் தினமும் போட்டிகள் நடந்து வருகின்றன. சாம்பியன் பட்டத்தை வெல்ல மொத்தம் 10 அணிகள் முட்டி மோதுகின்றன. கடந்த மார்ச் 31ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்(ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்(டிசி) அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து டெல்லி அணி வீரர்கள் பெங்களூரில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டனர். டெல்லி விமானத்தில் அவர்கள் இறங்கியபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது டெல்லி அணி வீரர்களின் பேட், தொடை பேட்கள், க்ளோவ்ஸ் உள்பட பல்வேறு உபகரணங்கள் என பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வார்னர் தனது வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் 16 பேட்டுகள், பேட், ஷூக்கள், தொடை பேடுகள், க்ளோவ்ஸ், கிட்பேக்குகள் திருடப்பட்டுள்ளன. எனக்கு சொந்தமான 2 பேட்டுகள், மிட்செல் மார்ஸ், பில் சால்ட்டுக்கு சொந்தமான தலா 3 பேட்டுகள், யஷ் துல்லுக்கு சொந்தமான 6 பேட்டுகள் திருட்டு போனது என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இதுபற்றி டெல்லி அணி நிர்வாகம் சார்பில் பெங்களூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது 2 பேரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போலீசாரிடம் சிக்கியவர்களிடம் இருந்து பேட் உள்பட பல்வேறு பொருட்களை போலீசார் மீட்டனர். இதுபற்றியும் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பேட் உள்ளிட்ட உபகரணங்களின் படத்தை வெளியிட்ட டேவிட் வார்னர், ‛‛போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டனர். இன்னும் சில பேட்டுகள் மிஸ்ஸிங்காக உள்ளது. இருப்பினும் நன்றி'' என தெரிவித்துள்ளார். அதாவது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெரும்பாலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த டேவிட் வார்னர், தான் இன்னும் சில பேட்கள் மிஸ்ஸாகி இருப்பதாக தெரிவித்து வருத்தத்தையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications