சூடான் விவகாரம்.. சித்தராமையாவை சீண்டிய தேஜஸ்வி.. எமெர்ஜென்சி டோர் விவகாரத்தை கிளறிய காங்கிரஸ்
பெங்களூர்: சூடானில் சிக்கியுள்ள கர்நாடக பழங்குடியின மக்களை மீட்க வேண்டும் என மத்திய அரசை சித்தராமையா வலியுறுத்தியிருந்தார். இதற்கு தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்த நிலையில், விமானத்தில் அவசர வழி கதவை திறந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் சூடானில் மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு மோதலால் அங்கு அப்பாவி மக்கள் பலியாகும் சோகமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள கர்நாடக மாநில பழங்குடியின மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சித்தராமையா மத்திய அரசை வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு, பாஜகவிற்கு யாரும் பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேஜஸ்வி சூர்யா பதில் ட்விட் போட்டு சித்தராமையாவை விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், தேஜஸ்வி சூர்யாவை சீண்டும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிண்டே ட்விட் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- விமானத்தின் எமெர்ஜென்சி எக்சிட் கதவுடன் விளையாடும் இந்த நபர் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் எமெர்ஜென்சி கதவை தவறுதலாக திறந்ததை வைத்து தேஜஸ்வி சூர்யாவை காங்கிரஸ் சாடியுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications