Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக, அதன் சித்தாந்தங்களுக்கு எதிரான போர் இது.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ராகுல் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிரதமர் மோடிக்கும் INDIA வுக்கும் எதிரான போராட்டம் இதுவாகும். இந்தியா அனைத்து போராட்டங்களிலும் வென்றுள்ளது என்று ராகுல் காந்தி பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில் கூறினார்.

வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் கடந்த மாதம்23-ந் தேதி பாட்னாவில் கூடி ஆலோசித்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18-ந் தேதிகளில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Fight between NDA and INDIA - Rahul Gandhi speech at Opposition meet

இதன்படி, நேற்றும் இன்றும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் மொத்தம் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரணின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா(யுபிடி), அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பாஜகவை வரும் தேர்தலில் எப்படியும் வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி I-N-D-I-A என பெயர் வைக்கப்பட்டுள்ளது. I -N-D-I-A என்பதற்கு Indian National Democratic Inclusive Alliance என்பது தான் விரிவாக்கமாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று சொல்லலாம்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பெயரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி, மோடிக்கு எதிராக யார் என்ற கேள்வி எழுகிறது. மோடிக்கு எதிராக இந்தியாவே உள்ளது என்பதற்கு சான்றாக இந்தியா என பெயர் . மோடி VS இந்தியா என பொருள் படும் வகையில் இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் முடிந்தபிறகு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: நாட்டின் வளம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே செல்கிறது. இந்தியாவின் இருவேறு சித்தாங்களுக்கு இடையேயான போர் இது. நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டின் குரலுக்கான போராட்டம் இதுவாகும். எனவேதான் INDIA என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. இந்த போராட்டம் ஆனது இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் இல்லை. இது இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம் ஆகும்.. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+