பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டைப்பிஸ்ட் வேலைக்கு மோடி அனுப்பியதாக போலி பரிந்துரை கடிதம்.. அரண்டு போன நீதிமன்றம்.. இளைஞர் கைது

Google Oneindia Tamil News

பெங்களூரு:அரசு வேலைக்காக பிரதமர் மோடியின் கையெழுத்தை போலியாக போட்டு கையெழுத்திட்டு, கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கே பரிந்துரை கடிதம் அனுப்பிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெலகவி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். அவர் தட்டச்சு பயிற்சி பெற்றவர், அதற்கான தேர்வையும் எழுதி அரசு பணிக்காக காத்திருந்தார். பலமுறை முயற்சித்தும் வேலை கிடைக்காததால் என்ன செய்யலாம் என்று மண்டையை குடைந்தவருக்கு ஒரு யோசனை உதித்தது.

for a government job, 30 year man forges none other than prime minister modis signature, arrested

பிரதமர் மோடியே, தம்மை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்தால் வேலை கிடைக்கும் என்று எண்ணினார். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவர் உடனடியாக களத்தில் இறங்கினார்.

அரசு பணி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அனுப்புவது போல, அவரின் கையெழுத்திட்ட பரிந்துரை கடிதத்தை சஞ்சய் கர்நாடக உயர் நீதி மன்றத்திற்கு அனுப்பினார். சாதாரண தட்டச்சு வேலைக்கு... பிரதமர் மோடியின் இருந்து சிபாரிசு கடிதமா என்ற அரண்டு போன நீதிமன்ற ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

அது குறித்த தகவல் வரபெற்ற அம்மாநில உயர் நீதிமன்றத்தின் இணை பதிவாளர் ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்து, சஞ்சய் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சஞ்சய்யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் புகார் குறித்து உயர் நீதிமன்ற இணை பதிவாளர் ராஜேஸ்வரி கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் அரசு தட்டச்சு பணிக்காக, பிரதமர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கடிதம் ஒன்று தபாலில் வந்திருந்தது. அதில் சஞ்சய் என்பவருக்கு அரசு தட்டச்சு பணிக்கான பரிந்துரை என்று குறிப்பிட்டிருந்தது. அதனை பார்த்த பின் உயர் நீதி மன்றமே அதிர்ந்து போனது.

பின்னர், பரிந்துரை கடிதத்தின் உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். பிரதமர் அலுவலகத்திற்கும் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில், அதுபோல் பரிந்துரை கடிதம் எதுவும் பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனை அறிந்து காவல்துறை அதிகாரியிடம் சஞ்சய் என்பவர் மீது புகார் கொடுத்தேன் என்றார்.

அரசு வேலை வேண்டும் என்று எண்ணியது தப்பில்லை... ஆனால் அதற்காக போலி பரிந்துரை கடிதம்.. அதுவும் பிரதமரே வேலை கொடுங்கள் என்று கடிதம் அனுப்பியதாக தயாரித்தது கொஞ்சம் ஓவர்தான்.

English summary
A 30 year old private firm employee from Belagavi named Sanjay Kumar was so desperate to get a government job as a typist. He made a fake PMO letterhead and forged Prime Minister Modi's signature, now got arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X