எவ்ளோ நேரம்தான் வெயிட் பண்றது?.. பயணிகளை விட்டுவிட்டு சர்ர்ன்னு பறந்த விமானம்.. பெங்களூரில் 'ஷாக்'
பெங்களூர்: பெங்களூரில் விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த போது, அவர்களை ஏற்றாமல் விமானம் புறப்பட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். முக்கியமான வேலைக்காக செல்ல இருந்தவர்கள் விமான நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரிடமும் பயணிகள் புகார் அளித்ததால் பெங்களூர் விமான நிலையத்தில் சில மணிநேரம் பதற்றமான சூழல் காணப்பட்டது.

விமான பரிதாபங்கள்
விமானங்கள் தொடர்பான பரபரப்பு செய்திகள் சமீபகாலமாக தொடர்ச்சியாக ஊடகங்களில் அடிப்பட்டு வருகின்றன. விமானத்தில் சக பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்தது; நடுவானில் விமானத்தில் மது அருந்துவிட்டு இரு பயணிகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டது; விமானத்தில் சிறுமியிடம் இளைஞர் அத்துமீற முயன்றது என கடந்த 2 வாரங்களில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் விமானங்கள் நடந்து வருகின்றன. அப்படியொரு சம்பவம்தான் நேற்று பெங்களூரில் நடந்திருக்கிறது.

பஸ்களில் சென்ற பயணிகள்
பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு கோ ஃபர்ஸ்ட் (Go First) விமானம் டெல்லிக்கு செல்வதாக இருந்தது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக வழக்கம் போல பயணிகளுக்கு சோதனை நடைபெற்றது. பின்னர் பயணிகளை 4 குழுக்களாக பிரித்து பஸ்கள் மூலமாக விமானத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

பறந்த விமானம்
அதன்படி, பயணிகள் தனித்தனி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பாகவே அவர்களின் உடைமைகள் (லக்கேஜ்) விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்நிலையில், முதல் 3 பஸ்களில் சென்ற பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். 4-வது பேருந்து 54 பயணிகளுடன் விமானத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக விமானம் புறப்பட்டு பறந்து சென்றது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் சத்தம் போட்டனர். உள்ளே இருக்கும் விமானிக்கு, இவர்களின் சத்தம் என்ன கேட்கவா போகிறது? அவர் விர்ரென விமானத்தை கிளப்பிச் சென்றுவிட்டார்.இதையடுத்து, அந்தப் பயணிகள் சம்பந்தப்பட் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அலறிய பயணிகள்
பயணிகளின் கோபத்தை உணர்ந்த அதிகாரிகள், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பயணிகள் சமாதானம் அடையவில்லை. மேலும் அவர்கள், இந்த விஷயம் குறித்து மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ட்விட்டரில் புகார் தெரிவித்தனர். பின்னர் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் தொலைப்பேசியில் பேசினர். இதனைத் தொடர்ந்து, அந்த பயணிகள் வேறு விமானத்தில் காலை 10 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திடம் மத்திய விமானப்போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications