Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு குட்பை.. கர்நாடகாவில் கூட்டணியை விட்டு வெளியேறிய குமாரசாமியின் கட்சி.. தேவேகவுடா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவும், ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் கூட்டணியில் உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. ஜேடிஎஸ் தனித்து தான் போட்டியிடும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 2023ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தனித்து களமிறங்கியது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் செல்வாக்காக உள்ள தொகுதிகளிலும் கூட காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு பின்னடைவைய ஏற்படுத்தியது.

good-bye-to-bjp-alliance-jds-to-go-it-alone-in-local-body-elections-in-karnataka-declares-deve-gow

இதையடுத்து கடந்த ஆண்டு 2024ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும், ஜேடிஎஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து அதிக இடங்களை கைப்பற்றியது. ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் கர்நாடகா முதல்வருமான குமாரசாமி மண்டியாவில் போட்டியிட்டு எம்பியானார். இவர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் ஸ்டீல் துறையின் கேபினட் அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அறிவித்துள்ளார். இவர் தற்போது ராஜ்யசபா எம்பியாகவும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஜேடிஎஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று தேவேகவுடா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛நாங்கள் பாஜகவுடன் லோக்சபா, சட்டசபை மற்றும் கவுன்சில் தேர்தலில் தான் கூட்டணியாக போட்டியிடுவோம். பாஜக மாநில தலைவர் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. அதுபற்றி கேள்வி எழுப்ப நான் விரும்பவில்லை.

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட உள்ளோம்'' என்று கூறியுள்ளார். இது கர்நாடகாவில் எதிர்காலத்தில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

மேலும் கர்நாடகாவை எடுத்து கொண்டால் ஜேடிஎஸ் கட்சி பழைய மைசூர் மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜாதி ஓட்டுகளாகும். தேவேகவுடா ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இந்த சமுதாய மக்கள் பழைய மைசூர் மாவட்டங்களில் அதிகமாக உள்ளனர். குறிப்பாக பெங்களூர் புறநகர், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, மண்டியா, மைசூரு, ஹாசன், சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமானவர்கள் உள்னர். இதனால் தான் ஜேடிஎஸ் கட்சி இந்த மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ளது.

தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருக்கும் டிகே சிவக்குமாரும் இந்த ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இதனால் தான் கடந்த 2023ம் ஆண்டில் அவர் காங்கிரஸ் தலைவராக தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒக்கலிகர் ஓட்டுகளை காங்கிரஸ் வசம் கொண்டு வந்து பழைய மைசூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியை வீழ்த்தினார்.

இப்போது மீண்டும் தேவேகவுடா தனது கட்சியை பழைய மைசூர் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்கதாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.இந்த மாவட்டங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு என்பது கிடையாது. சில குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் தான் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது.

இதனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இந்த மாவட்டங்களில் அந்த கட்சியை வளர்த்து விட வேண்டியிருக்கும். ஏற்கனவே காங்கிரஸ் தங்களின் ஓட்டுகளை பறித்துள்ள நிலையில் பாஜக வளர்ந்தால் அது ஜேடிஎஸ் கட்சிக்கு ஆபத்தாக மாறும் என்ற கணக்கீட்டில் தேவேகவுடா உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சி தனித்து களமிறங்கும் என்று அறிவித்து இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+