பெங்களூர் டூ மைசூரு.. பத்து வழிச்சாலையில் "அதை" பார்த்தீங்களா? பெங்களூர் ரோட்டில் "கண்" விரட்டுதே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைத்து அதிவிரைவு எக்ஸ்பிரஸ்வே சாலைகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கையிலெடுத்து வரும் நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு - மைசூரு ஆகிய நகரங்களுக்கு இடையிலான எக்ஸ்பிரஸ்வே சாலையை, கடந்த வருடம் மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், இந்த சாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே நிறைய விபத்துக்கள் நடக்க துவங்கின. இந்த 9 மாதங்களில் மட்டும் மொத்தம் 158 பேர் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்..

Bangalore

பாதுகாப்பு வசதிகள்: இதனால் கொதிப்படைந்த மக்கள், போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தராமல், அதற்குள் எதுக்காக இந்த சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து, போக்குவரத்து துறையானது, சாலையில் கண்காணிப்பு வசதிகளை அதிகமாக்கியது.

மேலும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட ANPR கேமராக்களை பெங்களூரு - மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் பொருத்தவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்தது..

வாகன எண்கள்: ANPR கேமராக்களின் மூலம், வாகனங்களின் தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணப்படும்.. இதை வைத்தே, சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வாகன எண்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து எச்சரிக்க முடியும். ஒன் வே-யில் செல்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுபவர்கள் என விதிமீறல்களில் ஈடுபடுவோரை எளிதாக கண்காணிக்க முடியும்.

அதன்படி, பெங்களூரூ டூ மைசூரு சாலையில், ஒவ்வொரு 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் இந்த கேமராக்கள் பொருத்தும் பணி நடப்பதாக சமீபத்தில்கூட தகவல் வெளியாகியிருந்தது.

கேமராக்கள்: இந்நிலையில், : பெங்களூரு -- மைசூரு பத்து வழி சாலையில் ஐடிஎம்எஸ் கேமராக்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நிறுவப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதாவது, பெங்களூரில் இருந்து மைசூருக்கு அமைக்கப்பட்டுள்ள பத்து வழி சாலையில் விபத்துகள் அதிகமாக நடப்பதால், 100 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதைத்தவிர, பத்து வழி சாலையில் பல இடங்களில் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

அபராதம்: இந்த கேமராக்கள், வேகமாக செல்லும் வாகனங்களை போட்டோ எடுத்துவிடும்.. இந்த போட்டோவை வைத்து, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், பத்து வழி சாலையில் வேகக் கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், ஐடிஎம்எஸ் என்ற நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கேமராக்கள் பொருத்தும் பணி வரும் 1ம் தேதி முதல் துவங்கும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

ரசீது: இந்த அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், வேகமாக செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுப்பதுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராத ரசீதையும் அனுப்பி வைக்குமாம்.. ஏற்கனவே கடந்த 2022-ல் பெங்களூரு நகருக்குள் 50 நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது புதிய வசதிகள் கொண்ட கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதனால் வாகன விபத்துகள் வெகுவாக தவிர்க்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+