இனி பிற மொழியினர் கைகளுக்கு போகும் பெங்களூர்? பாஜக வார்னிங்! அசராமல் கர்நாடக அரசு நிறைவேற்றிய மசோதா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:பெங்களூரில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள மாநகராட்சியை 7 மாநகராட்சியாக பிரிக்கும் ‛கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா' நேற்று கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாகும் பட்சத்தில் கர்நாடகாவை சேராத பிற மாநிலத்தில் இருந்து பெங்களூரில் வசித்து வருவோரும் மேயர் ஆகலாம் என்று கூறி பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஆண்டுதோறும் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. தற்போது பெங்களூர் மக்கள்தொகை ஒரு கோடியை கடந்துவிட்டது. பெங்களூரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள், 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

bangalore bangalore corporation karnataka

பெங்களூர் மாநகராட்சியை எடுத்து கொண்டால் மொத்தம் 198 வார்டுகள் இருந்தன. இது தற்போது 243 வார்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மாநகராட்சிக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது கர்நாடகாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் சார்பில் ‛கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா' (Greater Bengaluru Governance Bill) என்பது நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பெங்களூர் வளர்ச்சி துறை அமைச்சராக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளார். இவர் தான் மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் ஆர் அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி அவர் சட்டசபையில், ‛‛கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா" என்பது பெங்களூர் மாநகராட்சியை 7 ஆக பிரிக்க அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி கன்னடர்கள் இல்லாத
பிற மொழி பேசும் மக்களை மேயராக்க வழிவகுத்து கொடுக்கிறது. பெங்களூர் நகரை கட்டமைத்தவர் கெம்பேகவுடா. ஆனால் கெம்பேகவுடாவின் (டிகே சிவக்குமாரின் தந்தை பெயரும் கெம்பேகவுடா என்று முடியும்) மகனாக டிகே சிவக்குமார் பெங்களூரை பிரிக்க
நினைக்கிறார். அவர் அப்படி செய்யக்கூடாது.

2006ல் பெங்களூர் மாநகராட்சியில் கன்னட மக்களின் எண்ணிக்கை என்பது குறைந்தது. மைனாரிட்டியாக கன்னடர்கள் சரிந்தனர். கன்னடர்கள் எண்ணிக்கை சரிந்தால் அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுவிடும். இதனால் பிற கிராம பகுதிகளை பெங்களூருவுடன் இணைத்தோம். ஆனால் இந்த மசோதா என்பது கன்னட மேயர்களை குறைக்கும். பெங்களூர் கிழக்கு பகுதியில் எப்படி கன்னட நிலைத்து இருக்கும்? அதுமட்டுமின்றி கன்னட மேயர்களும் நமக்கு கிடைக்காது.

பெங்களூரின் கிழக்கு பகுதி என்பது தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை அதிகம் கொண்டுள்ளது. மேற்கு பெங்களூரை எடுத்து கொண்டால் எதுவும் இல்லை. இதனால் வருவாயில் சிக்கல் ஏற்படும். மாநகராட்சிகள் இடையே பிரச்சனை உருவாகும்.
அதுமட்டுமின்றி இந்த மசோதா என்பது அரசியலமைப்பு 74 வது சட்டப்பிரிவுக்கு எதிரானதாக உள்ளது. இந்த சட்டப்பிரிவு என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கி வருகிறது.

இதனால் நாம் மாநகராட்சிக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த மசோதா மூலம் பெருநகர பெங்களூர் ஆணையம் வருகிறது. இதில் முதல்வர் தான் அதிகாரம் படைத்தவராக இருப்பார். மேயருக்கு அதிகாரம் என்பது இருக்காது. அதோடு முதல்வருக்கு பல வேலைகள் இருக்கும்போது மாநகராட்சி மீட்டிங்கை எப்படி நடத்துவார்? உதாரணமாக பெங்களூர் மெட்ரோபாலிட்டர் திட்ட கமிட்டி மீட்டிங் இதுவரை ஒருமுறை மட்டுமே நடந்துள்ளது. இப்படியான சூழல் தான் இந்த மசோதா மூலம் வரும்.

நம் மாநிலத்தில் 7 கோடி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒரு தலைமை செயலாளர் மட்டுமே உள்ளார். அப்படி இருக்கும்போது ஒரு கமிஷனரை கொண்டு பெங்களூர் மாநகராட்சியை நிர்வகிக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். நீங்கள் நினைத்தால் பெங்களூர் மாநகராட்சிக்கு என்று ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை கமிஷனராக நியமனம் செய்யுங்கள். ஆனால் பெங்களூர் மாநகராட்சியை பிரிக்க வேண்டாம்'' என்றார். ஆனால் பெங்களூரை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா என்பது நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமான பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+