இந்தியாவே வேண்டாம்.. நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்த பெங்களூர் தொழிலதிபர்! வரி பிரச்சனையால் விபரீத முடிவு
பெங்களூர்: இந்தியாவில் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி கட்டமைப்பு சரியாக இல்லை. இதனால் ‛பெண்டிங்'கில் உள்ள ரூ.4 கோடி வரியை செலுத்திவிட்டு பெங்களூரை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழிலதிபர் ரோஹித் ஷ்ராஃப் அறிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். அவர் யார்? இந்தியாவை விட்டு வெளியேற அவர் எடுத்த முடிவின் பின்னணி பற்றிய முக்கிய விஷயங்கள் வருமாறு:
பெங்களூரில் தொழிலதிபராக இருப்பவர் ரோஹித் ஷ்ராஃப். இவர் இவர் Aflog Group நிறுவனத்தின் பார்ட்டனராகவும், தலைமை பொறுப்பிலும் உள்ளார். இது மார்க்கெட்டிங் நிறுவனமாகும்.

இந்நிலையில் தான் ரோஹித் ஷ்ராஃப் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரி அதிகமாக உள்ளது என்பது தான்.
இதுதொடர்பாக ரோஹித் ஷ்ராஃ ப் தனது லிங்க்இன் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் வரி மற்றும் அதற்கான கட்டமைப்பு விவகாரத்தில் பல குறைபாடுகள் உள்ளது. வணிகத்துக்கான சூழல், வரி செலுத்துவோருக்கான அங்கீகாரம் சரியா இல்லை. கடந்த 12 முதல் 18 மாதங்களில் மட்டும் வணிக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி என மொத்தம் ரூ.4 கோடியை செலுத்தி உள்ளேன்.
முழுமையாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டும் கூட தொடர்ந்து பல விளக்கங்கள், தணிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இந்திய மக்கள்தொகையில் 4-5 சதவீத மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். ஆனாலும் இந்த மக்கள் தொடர்ந்து புதிய அறிவிப்புகள் வழியாக குறிவைக்கப்படுகின்றனர். இதனால் நெருக்கடி ஏற்படுகிறது.
ஜிஎஸ்டி முதல் வருமான வரி வரை பல விஷயங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த வரிகளை செலுத்தினாலும் கூட எந்த அங்கீகாரம் மற்றும் பலனும் கிடைப்பது இல்லை. மாறாக செலவு தான் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஜிஎஸ்டி, டிடிஎஸ் மற்றும் வருமான வரி உள்ளிட்டவற்றை சமாளிக்கவே தனியாக ஆட்களை நியமித்து பணியமர்த்த வேண்டி உள்ளது.
இந்த பிரச்சனையை எதிர்த்து போராடுவதை விட பணம் செலுத்தி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு பலரும் அடுத்த வேலைக்கு செல்கின்றனர். இப்படி வரி செலுத்தும் பலரும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் அற்றவர்களால் உள்ளதால் எளிதில் புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது சுரண்டப்படுகிறார்கள்.
இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளில் வணிகம் செய்கின்றனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது நாட்டை வெறுத்து செல்வது என்று பொருள் கொள்ளக்கூடாது. இப்போது சுய பாதுகாப்பே தேசபக்தி கோஷங்களை விட முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவை விட்டே வெளியேறுகிறேன்'' என கூறியுள்ளார். இந்த பதிவை பார்க்கும் பலரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் நண்பர்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி வருகின்றன. இன்னும் சிலர் அவருக்கு ஆறுதல் அளித்து வுருகின்றனர்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications