மைசூர் பாக், 1/2, பஸ்.. குழந்தைகளுக்கு என்ன பேர் வச்சிருக்காங்க பாருங்க! பழங்குடிகளின் விநோத பழக்கம்
“எப்படி இருப்பினும் ஒவ்வொரு பெயருக்கும் ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கதான் செய்கிறது. ஆனால் எங்கள் பெயரின் அர்த்தம் பரவலாக தெரிந்திருக்கிறது அவ்வளவுதான்” என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு, 'மைசூர் பாகு, காங்கிரஸ், பஸ் டிரெய்ன்' என வித்தியாசமான பெயரை வைத்து அசத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் பத்ராபூரில் வசித்து வரும் 'ஹக்கி பிக்கி' எனும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற பெயரை வைத்துள்ளனர். ஹக்கி பிக்கி என்றால் பறவைகளை பிடிப்பவர்கள் என்று அர்த்தம். இவர்கள் பழங்குடியின சமூகமாக இருந்தாலும் வரலாற்றில் இம்மக்களின் வீரம் செறிந்த போராட்டம் இடம்பெற்றிருக்கிறது. அதாவது இவர்கள் ராஜஸ்தான் பேரரசர் மகாராணா பிரதாப் வம்சத்துடன் தங்களை ஒப்பிட்டு கூறி வருகின்றனர்.
முகலாயர்களின் படையெடுப்புக்கு பின்னர் ஹக்கி பிக்கி வம்சத்தினர் தோற்கடிக்கப்பட்டு நாடோடிகளாக சுற்ற தொடங்கினர். அதன் பின்னர் பலர் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்தனர். ஆனால் சிலர் மட்டும் தொடர்ந்து நாடோடிகளாகவே சுற்றி வந்தனர். இதனால் இவர்கள் அரை நாடோடி சமூகத்தினராக அறியப்படுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை கலந்து இவர்களது மொழி உருவாகியுள்ளது. இந்த மொழிதான் இவர்களின் தொடர்பு மொழியாகும். ஆனாலும் இதிலேயே சில வித்தியாசங்களுடன் 14 பேச்சு வழக்குகள் இருக்கிறது.

பெயர்கள்
இந்நிலையில் இவர்கள் தங்களது குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை சூட்டி வருகின்றனர். இந்த நடைமுறை 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி விட்டதாகவும் கூறுகின்றனர். இப்படியாக குழந்தைகளுக்கு, 'கூகுள், பேஸ்புக், ஹைகோர்ட், இங்கிலீஷ், காபி, பிரிட்டிஷ், அமிதாப், அனில் கபூர், குளுகோஸ், அமெரிக்கா, ஒபாமா, ஒன் பை டூ, டாலர், எலிசபெத்' என வித்தியாசமாக பெயர்களை வைத்துள்ளனர். இந்த ஒவ்வொரு பெயர்களுக்கு பின்னால் ஒவ்வொரு காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உதாரணமாக மைசூர் பாகுவின் இனிப்பை விரும்பிய தம்பதியினர் தங்களது குழந்தைக்கு 'மைசூர் பாகு' என்றே பெயர் வைத்துவிட்டனர்.

நண்பர்கள்
இந்த கிராமத்தில் பலரின் பெயர்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகதான் இருக்கும். இது குறித்து உள்ளூர் ஆசிரியர்கள் கூறுகையில், "எங்களது பள்ளியில் புதியதாக பல மாணவர்கள் சேர்ந்தார்கள். அதில் காங்கிரஸ் மற்றும் ஜனதா எனும் மாணவர்கள் ஒரே நாளில் நட்பாகிவிட்டனர்" என கூறியுள்ளார். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களின் பாஸ்போர்ட்டிலும் இதே பெயர்தான் இடம்பெற்றிருக்கிறது. எனவே பல சமயங்களில் குழப்பங்களை எதிர்கொண்டதாக இந்த பெயரை கொண்ட இளைஞர்கள் கூறியுள்ளனர். சில நேரம் வெளியில் தங்களது பெயரை கூறும்போது சிலர் திரும்ப திரும்ப கேட்பதாகவும், பலர் கேட்டவுடன் சிரித்துவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

விளக்கம்
எப்படி இருப்பினும் எல்லா பெயர்களுக்கும் ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் எங்களுடைய பெயருக்கான அர்த்தம் பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே இந்த பெயரை கொண்டிருப்பது எங்களுக்கு ஒன்றும் விநோதமானதாக தெரியவில்லை என கூறியுள்ளனர். பெயர்களை போலவே இந்த மக்களின் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானதாக இருக்கிறது. திருமணங்களில் பெண் வீட்டார்தான் பொதுவாக வரதட்சனை கொடுப்பார்கள். ஆனால் இந்த மக்களின் திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டார்தான் வரதட்சணை கொடுக்க வேண்டும்.

திருமணம்
ஒருவேளை திருமணத்திற்கு பின்னர் ஏதெனும் பிரச்னை வந்து இருவரும் பிரிந்துவிட்டால் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் வாங்கிய வரதட்சனையில் பாதியை திருப்பி கொடுத்துவிட வேண்டும். இந்த வித்தியாசமான பழக்கவழக்கங்கள் இவர்களை தனித்துவமாக காட்டுகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications