“துபாய் ஏர் ஷோவில் நடந்த தேஜஸ் விமான விபத்து.. தனிப்பட்ட நிகழ்வு!” - HAL நிறுவனம் விளக்கம்
பெங்களூர்: கடந்த 21ம் தேதி துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான தளத்தில் நடந்த ஏர் ஷோவில் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து விமானத்தை தயாரித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "துபாயில் நடந்த தேஜாஸ் விமான விபத்து ஒரு தனிப்பட்ட நிகழ்வு. இந்த சம்பவத்தால் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள், நிதி செயல்திறன் அல்லது அதன் எதிர்கால விநியோகங்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விசாரணை நடத்தும் அமைப்புகளுக்கு நிறுவனம் அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. விபத்து தொடர்பான விசாரணையில் வெளியாகும் முன்னேற்றம் குறித்து அறிவிக்கப்படும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய இந்திய விமானப்படை விசாரணை குழுவை அமைத்து இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நிறுவனம் கூறியிருந்தாலும், இன்று காலை தொடங்கி, இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதம் அளவுக்கு குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.
தேஜஸ் விமானம் ஏறத்தாழ கடந்த 10 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ஒரே ஒருமுறை மட்டுமே விபத்தில் சிக்கியது. அதிலும் விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பி இருந்தார். அந்த அளவுக்கு நம்பிக்கை பெற்ற இந்த விமானம், திடீரென விழுந்து நொறுங்கி இருப்பது பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விமானியின் மறைவுக்கு ரஷ்ய விமானப்படை, தனது போர் விமானங்களை இயக்கி இறுதி மரியாதை செலுத்தியது. அதேபோல அமெரிக்க விமானப்படையின் ஒரு பிரிவு, துபாய் ஏர் ஷோவில் நாங்கள் விமானத்தை இயக்க மாட்டோம் என்று கூறி விங் கமாண்டர் மறைவுக்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications