அதெப்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடலாம்? பாஜக போலவே பாயும் மாஜி முதல்வர் குமாரசாமி!
பெங்களூர்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொற்ப அளவு நீரை கர்நாடகா காங்கிரஸ் அரசு திறந்துவிட்டதே தவறு என கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மாநிலா முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான குமாரசாமி.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் வரை திறந்துவிடப்பட வேண்டிய எஞ்சிய நீர் அளவு 37 டிஎம்சி. ஆனால் இதனை கர்நாடகா அரசு திறந்துவிடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் வகையில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவில்லை. 10 நாட்களுக்கு 10,000 கன அடிநீரை மட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறது.

இதனால் தமிழ்நாடு அரசு வேறுவழியே இல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா அரசு மிகவும் சொற்பமான அளவு காவிரி நீரை திறந்துவிட்டது. இந்த சொற்ப நீரையும் இனி திறந்துவிடவே முடியாது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டுக்கு சொற்ப அளவு நீரை திறந்துவிட்டதற்கு கர்நாடகா முன்னாள் முதல்வரான பாஜகவின் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது கர்நாடகா மற்றொரு முன்னாள் முதல்வரான குமாரசாமியும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், தமிழ்நாடு பாசனப் பரப்பை ஆண்டுதோறும் விரிவாக்கம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட தேவை இல்லை. கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்துவிட்டது தவறு. உச்சநீதிமன்றம், காவிரி நீரை திறக்க உத்தரவு பிறப்பிக்காத நிலையில் கர்நாடகா அரசு ஏன் இப்படி செய்தது? தமிழ்நாடு அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு அலட்சியமாக இருந்து வருகிறது. கர்நாடகா அரசும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துகளை உடனே முன்வைக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் ஆளும் காங்கிரஸ் அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என காட்டமாக கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications