கல்யாணம் ஆகி 2 வருசமாகியும் கிட்டவரல.. கணவன் மீது போலீசில் இளம் பெண் புகார்.. செல்போனில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என்று இளம்பெண் ஒருவர் கணவர் மீது பெங்களூரு போலீசில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதாகவும், அதனால் தான் தாம்பத்தியத்தில் ஈடுபட அவர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

பெங்களூரு மல்லத்தஹள்ளியில் வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)க்கும் எம்பிஏ படித்த பட்டதாரி பெண் மீனாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

he is not relationship with me : A bangalore women complaint against husband

திருமணத்திற்கு பிறகு ரமேஷ் மீனா தம்பதி பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளனர்.

சாப்ட்வேர் இன்ஜினியர் ரமேஷ் திருமணம் ஆன புதிதில் இருந்தே மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளவில்லை. சரி திருமணம் ஆன புதிது என்பதால் அப்படி இருக்கிறார் என்று நினைத்து மீனா அமைதியாக இருந்துள்ளார். ஆனால் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இது ஒருபுறம் எனில், மீனாவிடம் குடும்பத்தினர், விஷேசம் இருக்கா, என்று அடிக்கடி கேட்டுள்ளனர். அதாவது குழந்தை உண்டாகிவிட்டதா என்று உறவினர்கள் கேட்டு வந்துள்ளனர். ஆனால் மீனாவோ, தனது கணவர் தன்னுடன் 2 ஆண்டுகளாக தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்தது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.

இதையடுத்து கணவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் மீனா. அங்கு இருவரும் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனாலும் கணவர் ரமேஷ தாம்பத்திய உறவு குறித்து ஆர்வமே இல்லாமல் இருந்துள்ளார்.

அதே நேரத்தில் மீனாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் பேச தொடங்கினார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மீனா, தன்னுடைய கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார்.

அப்போது கணவர் ரமேஷின் செல்போனில், அவர் வேறு சில ஆண்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் மனம் உடைந்து போன மீனா, சாப்ட்வேர் இன்ஜினியர் ரமேஷ் உடன் வாழ பிடிக்காமல் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.அப்போதும் கணவர் வீட்டினர், 2 பேரும் சேர்ந்து வாழும்படியும் இளம்பெண்ணை வற்புறுத்தி உள்ளார்கள். அத்துடன் ரமேஷ் மீனாவிடம் இனிமேல், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட மாட்டேன். நீ மீண்டும் குடும்பம் நடத்த வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். இதுபற்றி தன்னுடைய குடும்பத்தினரிடம் மீனா தெரிவித்துள்ளார்.

பின்னர் 2 குடும்பத்தினரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ரமேஷ் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்து, என்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளீர்கள் ஓரினச்சேர்க்கையாளரான கணவருடன் தன்னால் சேர்ந்து வாழ முடியாது என்றும், இனி அவருடன் சேர்ந்து வாழ சாத்தியமில்லை என்று மீனா திட்டவடடமாக அவர்களிடம் கூறினார்.

அத்துடன் கணவர் ரமேஷ் மீது பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை முழுமையாக கூறி புகாரும் அளித்தார். அந்த புகாரில் திருமணமான 2 ஆண்டுகளாக தன்னுடன் கணவர் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என்றும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் கூறினார்.அந்த புகாரின் பேரில் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+