"வாட்டர் பாட்டில்" கேட்ட சுசனா சேத்.. இந்தியாவையே உலுக்கிய பெண்.. "அது மேல" துணியை மூடி.. கலவர முகம்
பெங்களூர்: இன்னும் வாயே திறக்கலியாம் இந்த விசித்திரமான பெண் சுசனா சேத்.. போலீசார் எப்படி எப்படியோ அவரிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறாராம். ஆனால், மற்றொருபக்கம் போலீசாரின் விசாரணையில், சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் என்ற மேதாவி பெண்ணுக்கு 39 வயதாகிறது. இவர் கடந்த 6-ந்தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில், தன்னுடைய 4 வயது மகனுடன் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.

என்ன காரணம்: பிறகு 2வது நாளே, மகனை கொன்றுவிட்டு, சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்து கொண்டு தப்ப முயன்றார்.. ஆனால், போலீசார் அவரை மடக்கி பிடித்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள். கணவன் டைவர்ஸ் கேட்டதால், அவர் மீதிருந்த கோபத்தில் மகனை கொன்றுள்ளார். இருமல் மருந்து பாட்டில்களை வாங்கி , குழந்தைக்கு ஊற்றி, தலைகாணியால் அமுக்கி கொன்றுள்ளார்.
இப்போதைக்கு போலீசாரின் பிடியில் உள்ளார் அதிகாரி சுசனா சேத்.. மகனை கொன்றதாக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.. "என் மகன் செத்துப்போயிட்டான், அவன் எப்படி இறந்தான் என்றே தெரியாது" என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாராம். கணவனுடன் என்ன பிரச்சனை? ஏன் விவாகரத்து என்றும் சொல்லவில்லையாம்.. இதனால், அவரிடம் வாக்குமூலம் எதையும் பெற முடியாமல் போலீசார் கையை பிசைந்து நிற்கிறார்கள்.
மனநல பரிசோதனை: இதையடுத்து சுசனா சேத்துக்கு, மனநல பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.. இதுகுறித்து கோவா போலீசார் சொல்லும்போது, சுசனா சேத்தின் மனநிலையை அறிய உள்ளோம்.. கொடூர கொலையின் குற்ற பின்னணியை கண்டறிய, அவரை மனநல பரிசேததனைக்கு உட்படத்தியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், மகனை கொன்றுவிட்டு, சடலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் ரூமிலேயே விழித்து கொண்டிருந்தாராம்.. ரூம் சர்வீஸ் செய்ய ஓட்டல் ஊழியர்களையும் உள்ளே விடவில்லை.. படுக்கையில் சடலத்துக்கு பக்கத்திலேயே குழம்பி போய் உட்கார்ந்துள்ளார்.. அதற்கு பிறகுதான், சூட்கேஸில் சடலத்தை மறைத்து கொண்டு வெளியே முடிவு செய்துள்ளார்.
டாக்ஸி: பெட்டியின் அடியில் சடலத்தை வைத்து, அதற்குமேல், குழந்தையின் பொம்மைகளையும், துணிகளையும் போட்டு மறைத்துள்ளார்.. டாக்ஸியில் ஏறியபோது, மகனை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள், குழந்தையை பற்றி விசாரித்திருக்கிறார்கள்.. அதற்கு சுசனா கேதை, தன்னுடைய சொந்தக்காரரின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்று சொன்னாராம். அதற்கு பிறகே அவர் தங்கியிருந்த ரூமுக்குள் சென்று பார்த்தபோது, ரத்தக்கறை இருந்துள்ளது.
சுவற்றில் ரத்தக்கறை இருந்துள்ளது.. பிறகு, அங்கிருந்த டவல்களில் ரத்தக்கறை இருந்துள்ளது. ரூம் புக் செய்யும்போது, குழந்தையுடன் வந்தவர், கிளம்பி செல்லும்போது, குழந்தை மாயமாகியிருந்ததால், சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம் போலீஸுக்கு தகவல் தந்துள்ளது. அதாவது, மகனை கொன்றுவிட்டு, கைகளில் நரம்புகளை அறுத்து தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.. ஆனால், உயிர்போகவில்லையாம்.
கார் டிக்கி: டாக்ஸியில் ஏறப்போகும்போது, சூட்கேஸை பின்னாடி டிக்கியில் வைக்க சொன்னாராம்.. "சூட்கேஸ் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்தது, ஆனால் நான் அதைப்பற்றி அதிகம் கேட்டுக்கொள்ளவில்லை" என்று சம்பந்தப்பட்ட டிரைவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
இவர்கள் செல்லும்வழியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 4 மணி நேரம் டிராபிக்கில் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால், ஏர்போர்ட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதாக டிரைவர் சொன்னாராம். ஆனால், சுசனா மறுத்துவிட்டு, சாலை வழியாகவே போக வேண்டும் என்று வற்புறுத்தினாராம்.. மிகவும் டென்ஷனாக காணப்பட்டாராம்.. அவரது நடவடிக்கைகள் விநோதமாக இருந்தது என்றும், வழியில் தண்ணீர் பாட்டல் வேண்டும் என்று கேட்டதாகவும் டிரைவர் சொல்லி உள்ளார்.
அப்பார்ட்மென்ட்: குடியிருந்த அப்பார்ட்மென்ட்டில் இவரை பற்றி விசாரித்திருக்கிறார்கள் போலீசார்.. எப்ப பார்த்தாலும் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம்.. ஆணவமாக நடந்து கொள்வாராம். இந்த தகவலையெல்லாம் போலீசார் சேகரித்துள்ளனர். தொடர்ந்து சுசனா சேத்திடம் விசாரணை நடக்கிறது. வெங்கடரமணாவிடமும் கோவா போலீசார் இனிமேல் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், கொடுமை என்னவென்றால், இந்தோனேஷியாவிலிருந்தபோது மகனுக்காக, பொம்மைகளையும், புது டிரஸ்ஸையும் வாங்கி கொண்டு வந்திருந்தாராம் வெங்கட்ராமன்..
போஸ்ட் மார்ட்டம் முடிந்ததுமே, வெங்கட்ராமனிடம்தான் சடலத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.. இரு கைகளிலும் குழந்தையை ஏந்திக் கொண்டு, வெடித்து கதறியபடியே, சுடுகாட்டில் வெங்கட்ராமன் இறுதிச்சடங்கை நடத்தியது, அங்கிருந்த மொத்த பேரையுமே உலுக்கி போட்டுவிட்டது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications