கர்நாடகாவை புரட்டி எடுக்கும் மழை.. ஒரே நாளில் 9 பேர் பலி.. 4 மாவட்டங்களில் வெள்ளம்!
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகி உள்ளனர். 44000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கடுமையான மழை காரணமாக கர்நாடகாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக தென் மாநிலங்களில் பெய்து வருகிறது. முக்கியமாக மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் மழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. வயநாடு, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் கடுமையான மழை பெய்து வருகிறது.

எங்கு
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

எப்படி
இந்த கர்நாடகாவில் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகி உள்ளனர். பெலகாவியில் 6 பேர் பலியாகி உள்ளனர். உத்தர கர்நாடகாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். சிவமோகாவில் ஒருவர் பலியானார்.

இடமாற்றம்
கர்நாடகாவில் வெள்ளம் காரணமாக 44000 மக்கள் மீட்பு முகாம்களில் தஞ்சம். மொத்தம் அங்கு 245 முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. நூற்றுக்கணக்கில் வீடுகள் இந்த மழை காரணமாக நீரில் மூழ்கி உள்ளது.

வெள்ளம்
இந்த வெள்ளம் காரணமாக, தற்போது காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக தற்போது காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications