ஹிஜாப் வழக்கு.. இது என்ன தெரு சண்டையா?.. "வீரப்பனை" குறிப்பிட்டு பேசிய வழக்கறிஞர்.. பரபர விவாதம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தீவிர வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். நேற்று இந்த ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பெரிய அமர்விற்கு மாற்றப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் (ஏற்கனவே வழக்கை விசாரித்த தனி நீதிபதி), ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

வழக்கறிஞர்கள் வாதம்

வழக்கறிஞர்கள் வாதம்

இந்த வழக்கில் இன்று மாணவிகள் தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். உடுப்பி இஸ்லாமிய மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ஆஜர் ஆனார். அதேபோல் குந்தபுரா மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கில் இதுவரை நடத்த முக்கிய விவாதங்களை பார்க்கலாம்,

நீதிபதிகள்: மாணவிகள் தலையை மூடும் வகையில் தலை ஸ்கார்ப் அணிந்து வர கூடாது என்பதற்கு எதிராகத்தானே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ; ஆம்

இந்த வழக்கில் இன்று மாணவிகள் தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். உடுப்பி இஸ்லாமிய மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ஆஜர் ஆனார். அதேபோல் குந்தபுரா மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கில் இதுவரை நடத்த முக்கிய விவாதங்களை பார்க்கலாம்,

நீதிபதிகள்: மாணவிகள் தலையை மூடும் வகையில் தலை ஸ்கார்ப் அணிந்து வர கூடாது என்பதற்கு எதிராகத்தானே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ; ஆம்

நீதிபதிகள்: உங்கள் வாதத்தை வைக்கவும்.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ; கர்நாடக கல்வி சட்டப்படி, பியு கல்லூரிகளுக்கு யூனிபார்ம் என்பதே கிடையாது. 1983 சட்டப்படி பள்ளிகளுக்கு மட்டுமே யூனிபார்ம் உள்ளது. பியு கல்லூரிகளுக்கு யூனிபார்ம் கிடையாது. இதற்காக பள்ளிகள் சட்டத்தில் 11 என்ற பிரிவு உள்ளது.

நீதிபதி: அப்படி என்றால் இந்த விதி எண் 11 பியு கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று கூறுகிறீர்களா? அதாவது கர்நாடகாவில் பியு கல்லூரிகளுக்கு யூனிபார்ம் கிடையாது என்று சொல்கிறீர்களா?
: உங்கள் வாதத்தை வைக்கவும்.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ; கர்நாடக கல்வி சட்டப்படி, பியு கல்லூரிகளுக்கு யுனிபார் என்பதே கிடையாது. 1983 சட்டப்படி பள்ளிகளுக்கு மட்டுமே யூனிபார்ம் உள்ளது. பியு கல்லூரிகளுக்கு யூனிபார்ம் கிடையாது. இதற்காக பள்ளிகள் சட்டத்தில் 11 என்ற பிரிவு உள்ளது.

நீதிபதி: அப்படி என்றால் இந்த விதி எண் 11 பியு கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று கூறுகிறீர்களா? அதாவது கர்நாடகாவில் பியு கல்லூரிகளுக்கு யூனிபார்ம் கிடையாது என்று சொல்கிறீர்களா?

யூனிபார்ம் கிடையாது

யூனிபார்ம் கிடையாது

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ; ஆம் இதற்காக சட்டம் எதுவும் இல்லை. அதேபோல் அபராதம் விதிப்பதாக விதிகள் எதுவும் இல்லை. அதே சமயம் யூனிபார்ம் விதிகள் பியு கல்லூரி கமிட்டி அளவில் இருந்து, அதற்கு தண்டனை இருந்தாலும் மாணவிகளை வகுப்பிற்குள் அனுமதிக்காமல் தடுப்பது தவறு . யுனிபார்ம் குறித்த விதிகள் இல்லாத போது அதை காரணம் காட்டி மாணவிகளை தடுப்பது தவறு.

அரசு தரப்பு வழக்கறிஞர்: ஆனால் இதை காரணம் காட்டி மற்ற மாணவ, மாணவியர் வேறு உடைகளை உடுத்தி வருகிறார்கள். சில மாணவ, மாணவியர் காவி நிற உடைகளை உடுத்தி வருகிறார்கள். இதில் பல விஷயங்கள் நடக்கின்றன. இதனால் மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்தே கல்லூரிகள் 3 நாட்கள் மூடப்பட்டது. இதன் காரணமாகவே யூனிபார்ம் கட்டாயம் என்றும், பியு கல்லூரி நிர்வாகம் யூனிபார்ம் பற்றி முடிவுகளை எடுக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்; இது வெறும் யுனிபார்ம் பிரச்சனை மட்டுமில்லை. இது மத உரிமை தொடர்பானது. அடிப்படை உரிமை தொடர்பானது. மாணவிகள் யூனிபார்ம் நிறத்தில் ஸ்கார்ப் அணிய அனுமதி கேட்டனர். ஆனால் ஸ்கார்ப் அணிய கூடாது என்று அரசு புது உத்தரவு போட்டுள்ளது. இது அவர்களின் மதத்தில் இருக்கும் வழக்கம். ஆனால் இதை அவர்களின் மத வழக்கம் இல்லை என்று அரசு கூறியுள்ளது .

 அரசு வழக்கறிஞர் மோதல்

அரசு வழக்கறிஞர் மோதல்

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத் பேசிக்கொண்டு இருக்கும் போதே அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டார்.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்: இது என்ன தெரு சண்டையா? ஏன் குறுக்கிடுகிறீர்கள்? நான் அரசு தரப்பு வழக்கறிஞரை மதிக்கிறேன். அவரும் என்னை மதிக்க வேண்டும். யூனிபார்ம் பற்றி பியு கல்லூரி கமிட்டியை முடிவு எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒரு அரசின் உத்தரவு அடிப்படை உரிமைகளை பறிக்கும்படி இருக்க முடியாது. மாணவிகளின் அடிப்படை உரிமையில் அவர்கள் எப்படி முடிவு எடுக்கலாம். இந்த அரசு நெருப்புடன் விளையாடுகிறது. மாணவிகளை தலை ஸ்கார்ப் அணிய அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: முதலில் ஹிஜாப் அணிவது, தலை ஸ்கார்ப் அணிவது என்பது சட்டம் 25ன் கீழ் அடிப்படை உரிமையில் வருகிறதா என்று பார்க்க வேண்டும். அதேபோல் இது மதத்தில் கட்டாயமாக இருக்கும் ஒரு வழக்கமாக என்றும் பார்க்க வேண்டும்.

அரசு தரப்பு: வெவ்வேறு குரான்களில் வெவ்வேறு விதமான விளக்கம் இதை பற்றி உள்ளது.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்: அப்படி என்றால் அடிப்படை உரிமை பற்றி அரசியலமைப்பு சட்டம் சொல்லி இருப்பதையும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி புரிந்து கொள்ள வேண்டி இருக்கும்.

உடை அல்ல கல்வி

உடை அல்ல கல்வி

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே: நீதிபதிகள் இதை உடை என்பதை தாண்டி. கல்வி என்ற அளவில் பார்க்க வேண்டும்.

அங்கு மாணவிகள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் இதை சாதாரண விஷயம் போல பேசுகிறார். ஆனால் இதில் அரசு கவனமான முடிவு எடுக்க வேண்டும். இது பெண்களின் கல்வி பற்றியது என்பதை மறக்க வேண்டாம்.

தொடர்ந்து பேசிய மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே: எரிகிற நெருப்பில் யாரும் எண்ணெயை போட வேண்டாம். முதலில் இந்த அரசு மாணவர்களை மீண்டும் வகுப்பிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். வகுப்பில் அமைதியான, பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதில் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். மாறாக பியு கல்லூரி கமிட்டிகளிடம் முடிவை கொடுத்தால் அவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சைக்குறி முடிவை எடுப்பார்கள். இது பெண்களின் உரிமை மற்றும் அடையாளம் பற்றியது என்று குறிப்பிட்டார்.

ராஜ்குமார் கடத்தல்

ராஜ்குமார் கடத்தல்

இதை தொடர்ந்து மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே வீரப்பன் மூலம் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தை விவரித்தார்.

வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே: இது மாணவிகள் பற்றிய விவகாரம். அவர்கள் பல கஷ்டங்களை இதனால் எதிர்கொண்டு வருகிறார்கள். எல்லோருக்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இது போன்ற பரபரப்பான நாட்களை நான் கர்நாடகாவில் ஏற்கனவே எதிர்கொண்டு இருக்கிறேன். இந்த மாநிலத்தில் நடந்த பல அனுபவங்களை நான் இங்கே பகிர்கிறேன்.. இங்கே கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அது பெரிய பரபரப்பை, சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியது.

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதை பற்றிய வழக்கை விசாரித்து வந்தனர். அப்போது எங்கள் வாதத்தில், லார்ட் ஏதாவது கலவரம் நடந்தால் என்ன செய்வது என்று கேட்டோம். அப்போது நீதிபதிகள் அமர்வு எங்களிடம்.. நீங்கள் எவ்வளவு மோசமான நிலையிலும் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை பின்பற்ற முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள் என்று அறிவுறுத்தினார்.

 கடத்தல் பிரச்சனை

கடத்தல் பிரச்சனை

அந்த கடத்தல் பிரச்சனை பல காலம் சென்று பின்னர் அமைதியாக, சுமுகமாக முடிக்கப்பட்டது. கலவரம் கைமீறி செல்லாத வகையில் முடிவு எடுக்கப்பட்டது. அன்று நீதிபதிகள் சொன்ன அறிவுரையை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு சட்டப்படி நடக்க வேண்டும். இந்த பிரச்சனையில் அவசர முடிவு எடுக்காமல், பிரச்சனை தணியவிட்டு, அமைதியாக முடிவு எடுக்க வேண்டும்.

இது அவசரமாக எடுக்கும் முடிவு அல்ல. இரண்டு தரப்பிற்கும் பிரச்சனை வராத வகையில் இரண்டுக்கும் நடுவே அரசு செல்ல வேண்டும். இதில் முழுமையான சட்ட ரீதியான தீர்வு கிடைக்கும் வரை அவசரப்பட்டு எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடாமல் பொறுமையாக முடிவுகளை எடுக்க வேண்டும். இது மாணவிகளின் படிப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், என்று வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வாதம் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+