"ஜெர்மனி 1933".. ஹிஜாப்பை எதிர்ப்பவர்களால் சீக்கியரின் டர்பனை தொட முடியுமா? கார்த்தி சிதம்பரம் பளீர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியா 1933ல் இருந்த ஜெர்மனி போல மாறிக்கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் வைத்துள்ளார்.

இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர கர்நாடகாவில் உள்ள பல்வேறு பியு கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 ஹிஜாப்

ஹிஜாப்

கடந்த 1 மாதமாக இஸ்லாமிய மாணவிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஹிஜாப் அணிந்தால் வகுப்பிற்குள் விட முடியாது என்று பள்ளி மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலில் மங்களூரில் தொடங்கிய இந்த தடை பின்னர் உடுப்பியில் பல்வேறு பியு கல்லூரிகளில் பரவியது. அதன்பின் சிக் மங்களூர், சிவமொக்கா போன்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு பியு கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இந்த நிலையில் ஹிஜாப் தடைக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ஹிஜாப்பை தடை செய்வது என்பது மாணவியரின் உடையை சீர்படுத்துவதற்காக அல்ல. அதை சாக்காக வைத்து, உங்களை நாங்கள் குறி வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று இஸ்லாமை பின்பற்றும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக எச்சரிக்கை விடுகின்றனர். இஸ்லாமியர்களை எதிர்க்கும் இவர்களால்.. அதே எதிர்ப்பை வகுப்பிற்கு டர்பன் அணிந்து வரும் சீக்கியருக்கு எதிராக செய்ய முடியுமா?

துணிச்சல் உள்ளதா?

அந்த துணிச்சல் இவர்களுக்கு இருக்கிறதா என்று எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். அதேபோல் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்தியாவை பழைய நாசி ஜெர்மனியோடு ஒப்பிட்டு இருக்கிறார். 1933ல் ஜெர்மனி ஹிட்லரின் நாசி கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு யூதர்களுக்கு எதிராக இதே போன்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன.

Recommended Video

    கர்நாடகாவில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை.. லோக்சபாவில் குரல் எழுப்பிய திமுக எம்பி செந்தில்குமார்
    யூதர்கள்

    யூதர்கள்

    முக்கியமாக யூதர்களுக்கு எதிராக நாசிகள் தங்கள் கைகளில் Swastika முத்திரை கொண்ட பேண்ட்களை அணிந்து இருந்தனர். பல கல்வி நிறுவனங்களில் யூதர்களை உள்ளே விடாமல் நாசிகள் தடுத்து நிறுத்தினர். கொஞ்சம் கொஞ்சமாக பரப்பப்பட்ட வெறுப்பு பிரச்சாரம் பின்னர் holocaust படுகொலையில் சென்று முடிந்தது. இந்த நிலையில் holocaust படுகொலைக்கு முன் தொடக்க கால ஜெர்மனியில் நடந்த சம்பவங்களுக்கு இணையாக இந்தியாவில் நடந்து வருவதாக கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+