பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க இந்தியாவில் நிம்மதியா இருக்கோம்.. விடுங்க! அல்கொய்தா தலைவருக்கு மாணவி முஸ்கானின் தந்தை பதிலடி

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் போது பிபி முஸ்கான் கான் என்ற மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்துத்துவா மாணவர்களை நோக்கி இவர் அல்லாஹு அக்பர் என்று எழுப்பிய கோஷம் தேசிய அளவில் வைரலாகி உள்ளது.

Recommended Video

    அல்கொய்தா தலைவருக்கு மாணவி Muskan-னின் தந்தை கொடுத்த பதிலடி | Oneindia Tamil

    மாண்டியாவில் உள்ள அரசு பியு கல்லூரியில் படிக்கும் பிபி முஸ்கான் கான் கல்லூரிக்கு சென்ற போது இந்துத்துவா மாணவர்கள் மூலம் சுற்றி வளைக்கப்பட்டார். இந்துத்துவா மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் சென்று கோஷம் எழுப்ப தனியாளாக இந்துத்துவா மாணவர்களை நோக்கி பிபி முஸ்கான் கான் அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பினார். இந்த வீடியோ தேசிய அளவில் வைரலாகி உள்ளது.

    கையை தூக்கி.. துணிச்சலாக பிபி முஸ்கான் கான் கோஷம் எழுப்பியது ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக, சின்னமாக உருவெடுத்தது.

     ‛அல்லாஹு அக்பர்’ கோஷமிட்ட முஸ்கான்! ஹிஜாப் தடையால்.. தேர்வு எழுதாமல் புறக்கணிப்பு! ‛அல்லாஹு அக்பர்’ கோஷமிட்ட முஸ்கான்! ஹிஜாப் தடையால்.. தேர்வு எழுதாமல் புறக்கணிப்பு!

    அல்கொய்தா

    அல்கொய்தா

    இந்த நிலையில் முஸ்கானை பாராட்டி அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நேற்று முதல்நாள் இவர் வெளியிட்ட 9 நிமிட வீடியோவில் முஸ்கானை பாராட்டி இருந்தார். அதில், இந்துத்துவா கும்பலை முஸ்கான் தைரியமாக எதிர்கொண்டு இருக்கிறார். ஜிஹாத்தின் ஆற்றல் அவரிடம் இருந்தது.

    அய்மன் அல் சவாஹிரி

    அய்மன் அல் சவாஹிரி

    அவர் எங்கள் மதத்திற்கான, விடுதலைக்கான கோஷத்தை எழுப்பி உள்ளார். இஸ்லாமிய மக்களை முஸ்கான் தட்டி எழுப்பி இருக்கிறார். முஸ்கான் ஒரு புனிதமான பெண். எங்கள் சகோதரி மிக முக்கியமான உயரத்தை அடைந்துவிட்டார், அல்லா அவருக்கான பரிசை வழங்குவார். இந்து இந்தியாவின் நிலையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அந்த நாட்டின் மோசமான நிலையை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

    கவிதை

    கவிதை

    இந்திய இஸ்லாமியர்கள் அங்கு தொடர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும். மீடியா மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவர் எங்களை கவர்ந்துவிட்டார். அவரை பாராட்டி நான் கவிதை கூட எழுதி இருக்கிறேன். நான் கொடுக்கும் இந்த கவிதையை பரிசாக நினைத்து முஸ்கான் சகோதரி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி அய்மன் அல் சவாஹிரி வீடியோவில் பேசி இருந்தார்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    ஹிஜாப் விவகாரத்தில் திடீரென அய்மன் அல் சவாஹிரி இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. தேவையின்றி முஸ்கானை அவர் பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் முஸ்கானின் தந்தை முகமது ஹுசைன் கான் அல்கொய்தா அமைப்பின் தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அல்கொய்தா அமைப்பின் தலைவர் இப்படி பேசியது தவறு. அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தவறு

    தவறு

    அந்த வீடியோ பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. செய்தி பார்த்துதான் தெரிந்து கொண்டோம். அவர் அரபியில் பேசியது கூட புரியவில்லை. நாங்கள் இந்தியாவில் நிம்மதியாக இருக்கிறோம். நாங்கள் சந்தோசமாக அன்புடன்.. எங்கள் சகோதரர்களுடன் வசித்து வருகிறோம்.

    ஏதாவது சொல்வார்கள்

    ஏதாவது சொல்வார்கள்

    மக்கள் ஏதாவது சொல்வார்கள். யாராவது பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். நாங்கள் எங்கள் நாட்டில் அமைதியாக வசிக்கிறோம். அவர் எங்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. எங்களுக்கும் இந்து சகோதரர்களுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்த அவர் முயன்று கொண்டு இருக்கிறார், என்று முஸ்கானின் தந்தை பதிலடி கொடுத்துள்ளார்.

    English summary
    Hijab Row: Muskan Father distance himself from Al Qaeda Chief, Says We Live peacefully in India. கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் போது பிபி முஸ்கான் கான் என்ற மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X