ஹிஜாப்.. உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியில்லை.. உச்சநீதிமன்றத்தில் நீதி வெல்லும்: மனுதாரர்களின் வக்கீல்
பெங்களூர்: ‛‛ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமில் பின்பற்றும் நடைமுறைகளில் இன்றியமையாததாகும். ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அங்கு நீதி வெல்லும் என்று நம்புகிறோம்'' என மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் தார் கூறினார்.
Recommended Video
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் முதன் முதலாக ஹிஜாப் பிரச்சனை உருவானது. ஹிஜாப்புக்கு, ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் மாணவர்கள் போராட தொடங்கினர்.
சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளில் சீருடை முறையை பின்பற்ற கர்நாடக அரசும் உத்தரவிட்டது.

வழக்கு
இந்நிலையில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட மாணவிகள் தனித்தனியே கர்நடாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் மீது நீதிபதி கிருஷ்ண தீட்சித் விசாரித்தார். அதன்பிறகு வழக்கு மூவர் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

தடை செல்லும்
ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் ஹிஜாப்புக்கு அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பு குறித்து அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ‛‛கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்கிறது. தனிநபர் விருப்பத்தை விட கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தை மேலோங்க செய்துள்ளது'' என்றார்.

மோசமான தீர்ப்பு
இந்த தீர்ப்பு குறித்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் தார் கூறுகையில், ‛‛ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமில் பின்பற்றும் நடைமுறைகளில் இன்றியமையாததாகும். ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அங்கு நீதி வெல்லும் என்று நம்புகிறோம்'' என்றார்.

தலைவர்கள் கருத்து
இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் அரசு பியூ கல்லூரி மாணவிகள் தேர்வை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications