ஆசையாக இலங்கைக்கு தேனிலவு சென்ற புதுமணத் தம்பதி! ஓட்டல் அறையில் நடந்த திடீர் சண்டையால் விபரீத முடிவு
பெங்களூர்: இலங்கைக்கு தேனிலவுக்குச் சென்ற புதுமணத் தம்பதியிடையே பழைய காதலன் குறித்த பேச்சு எழுந்ததால் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த இருவரும் தனித்தனியே த*கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் விஜயநகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி சிவன்னா (60). இவரது மகன் சுராஜ் சிவன்னா. இவர் ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கன்வி என்பவருக்கும் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. கன்வி எம்பிஏ பட்டதாரி.
இவர்களது திருமணம் மகிழ்ச்சியாக நடந்த நிலையில் இருவரும் தேனிலவுக்காக 10 நாட்களுக்கு இலங்கைச் சென்றனர். இருவரும் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்குச் சென்றுள்ளனர். அங்கு கன்வியின் பழைய ஆண் நண்பர் குறித்த பேச்சு எழுந்தது.
அப்போது சுராஜ் பேசிய பேச்சுகள் கன்விக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். இதனால் கன்வியும் சுராஜும் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், "என்னால் உன்னுடன் வாழ முடியாது" என சுராஜிடம் கன்வி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இருவரும் சண்டையிட்டுக் கொண்டதால் 10 நாட்கள் ட்ரிப், 5 நாட்களிலேயே முடிந்து இருவரும் பெங்களூருக்கு வந்துவிட்டனர். இதனால் சுராஜ் வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விசாரித்த போதுதான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சுராஜின் அண்ணன் சஞ்சய் சிவன்னா, அவர்களை சமாதானப்படுத்தினார். இந்த பிரச்சினையை விட்டுவிடுமாறும் கூறினாராம். ஆனால் இருவரும் கேட்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து கன்வி, தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம்.
அங்கு தனது அறைக்குச் சென்ற கன்வி, சிறிது நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கன்வியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனராம்.
தகவலறிந்த பெங்களூர் போலீஸார் பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது விசாரணையில் சுராஜின் குடும்பத்தினர், கன்வியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் திருமணத்தின் போதே தனது மாமியாரின் செயல்பாடுகளால் கன்வி சற்று மனமுடைந்தே காணப்பட்டார் என்றும் தெரிவித்திருந்தனர்.
எனவே சுராஜின் குடும்பத்தினரை கைது செய்யக் கோரி கன்வியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். கன்வி மரணத்தால் இரு குடும்பத்தினரிடையே பதற்றம் நீடித்தது.
சுராஜின் வீட்டை 30-க்கும் மேற்பட்டோர் சூறையாடி சுராஜை தேடியதாக அவரது அண்ணன் சஞ்சய் சிவன்னா தெரிவித்திருந்தார். இதனால் சுராஜ் குடும்பத்தினர் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்திற்கு கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி சென்றனர்.
பின்னர் அடுத்த நாள் அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குச் சென்றுவிட்டனராம். அங்கு இரு அறைகளை புக் செய்து தங்கியிருந்தனராம். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுராஜ் ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது தனது மகனை காண ஜெயந்தி வந்து பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது ஃபேனின் ஹூக் முறிந்து விழுந்துவிட்டதாம்.
இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரையும் தனது மூத்த மகன் சஞ்சயையும் ஜெயந்தி அழைத்தார். பின்னர் சுராஜை தூக்கில் இருந்து இறக்கி நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனராம். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இந்த நிலையில் கீழே விழுந்ததில் காயமடைந்த தாய் ஜெயந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுராஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
திருமணமாகி ஆறே வாரங்களில், தேனிலவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தொடங்கிய இந்த சோகம், இரண்டு உயிர்களைப் பலி வாங்கி, வெவ்வேறு மாநிலங்களில் வழக்குகளாக மாறி, இரண்டு குடும்பங்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications