பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசம்.. ஹனிடிராப்பில் சிக்கி தற்கொலை செய்த கர்நாடகா மடாதிபதி.. ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மடாதிபதி திங்கட்கிழமை கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இந்நிலையில் ஹனிடிராப்பில் சிக்கிய மடாதிபதி பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதை ரெக்கார்ட் செய்த கும்பல் அவரை மிரட்டியதால் கடிதம் எழுதிவிட்டு அவர் தற்கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக 45 வயது நிரம்பிய பசவலிங்க சுவாமி இருந்தார்.
லிங்காயத் சமுதாய மடமான இங்கு மடாதிபதியாக கடந்த 1997 முதல் பசவலிங்க சுவாமி செயல்பட்டு வந்தார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார்.

மடாதிபதி தற்கொலை
இந்நிலையில் தான் தீபாவளி தினத்தன்று காலை 6 மணியாகியும் மடத்தில் உள்ள பூஜை அறை திறக்கப்படவில்லை. தினமும் காலை 4 மணி முதல் மடாதிபதி பசவலிங்க சுவாமி வழக்கமாக அந்த அறையில் பூஜை செய்வார். வழக்கமாக கதவுகள் திறந்தபடி இருக்க உள்ளே மடாதிபதி பூஜை செய்வார். ஆனால் தீபாவளி தினத்தில் பூஜை அறை காலை 6 மணி ஆகியும் திறக்கப்படவில்லை.

தூக்கிட்டு தற்கொலை
மடத்தின் பிற அறைகளில் மடாதிபதி இல்லை. மேலும் அவர் பூஜை அறைக்குள் சென்று கதவை பூட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மடத்தில் இருந்தவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. போன் செய்தபோது பூஜை அறையில் மடாதிபதியின் செல்போன் சத்தம் கேட்டது. இதன்மூலம் அவர் பூஜை அறையில் இருப்பது உறுதியானது. ஆனால் அவர் எதுவும் பேசாததால் சந்தேகம் அடைந்தவர்கள் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தனர். அப்போது பூஜை அறை ஜன்னலில் உள்ள கிரீல் கம்பியில் தூக்குப்போட்டு பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

தற்கொலைக்கு முன்பு கடிதம்
மேலும் மடாதிபதி பசவலிங்கசுவாமி எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. 2 பக்கம் கொண்ட கடித்ததில் பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் இருந்தன. காஞ்சுக்கல் பாண்டே மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டினர். இந்த மிரட்டலால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார்.

விசாரணையில் திடுக் தகவல்
மேலும் தனது தற்கொலைக்கு காரணமான நபர்களின் பெயர்களை அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவரது தற்கொலை தொடர்பாக கடிதத்தில் இருந்த முக்கிய விஷயங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை செய்தது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஹனிடிராப்பில் சிக்கிய மடாதிபதி
மடாதிபதி எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். இந்த விசாரணையின்போது ஹனிடிராப்பில் மடாதிபதி சிக்கியது தெரியவந்தது. அதாவது ஒரு பெண் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர். மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர்.

4 ஆபாச வீடியோக்கள்
மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை அந்த பெண் தனது செல்போனில் ஸ்கீரின் ரெக்கார்ட் மூலம் பதிவு செய்து கொண்டார். இதனால் மடாதிபதியின் ஆபாச வீடியோவை அந்த பெண் பதிவு செய்து கொண்டுள்ளார். மொத்தம் 4 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோவை கொண்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறியுள்ளனர்.

தீவிர நடவடிக்கை
இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக மடாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த மிரட்டலில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் கைது செய்வோம். மேலும் மடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் இருக்கலாம். இதனால் அதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும் மடாதிபதியின் தற்கொலை கடிதத்தில் எந்த அரசியல்வாதிகளின் பெயரும் இடம்பெறவில்லை. இந்த விஷயத்தில் சாதகமாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

2வது மடாதிபதி தற்கொலை
கடந்த டிசம்பர் மாதம் ராமநகர் மாவட்டம் சிலும்பி மடத்தின் மடாதிபதி இதேபோல் ஜன்னல் கம்பியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரும் பசவலிங்க சுவாமி தான். இவர் உடல்நலக்குறைவு தொடர்பான பிரச்சனையால் மனம் உடைந்து தற்கொலை செய்த நிலையில் தற்போது காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை செய்துள்ளார்.

கர்நாடக அரசியலில் லிங்காயத் மடம்
கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயம் 17 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. இதனால் லிங்காயத் சமுதாயத்தினர் அரசியலில் தவிர்க்க முடியாதவர்கள். இந்த சமுதாயத்தின் கீழ் ஏராளமான மடங்கள் உள்ளன. இந்த மடாதிபதிகள் கர்நாடக அரசியலில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவர்கள் எப்போதும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த சமுதாயத்தை சேர்ந்த காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்த பசவலிங்க சுவாமி தான் ஹனிடிராப்பில் சிக்கி தற்போது தற்கொலை செய்துள்ளார் என்பது சோகமாக விஷயமாகும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications