• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முளைச்சு மூணு இலை விடல.. கன்றாவி பாருங்க.. கிளாஸ்ரூமிலேயே மாணவன் செய்த வேலை.. வெட்கம் வேற.. கலிகாலம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கிளாஸ்ரூம் என்றும் பாராமல், இந்த மாணவன் செய்த காரியம் வீடியோவாக ஷேர் ஆகிகொண்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. தும்கூர் அருகே சிக்கசாரங்கி அருகே அந்த தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது.. அந்த டீச்சர் பெயர் கந்தலஷ்மா.

இவர் எப்பவுமே தண்ணி அடித்துவிட்டுதான் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவாராம்.. மதுபோதையில் அந்த ஸ்கூலில் மற்ற எல்லா டீச்சர்களுடனும் சண்டை போடுவாராம்..

2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்.. பிஎப்ஐ மீதான தடையை வரவேற்கிறேன்.. அஜ்மீர் தர்கா தலைவர் கருத்து 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்.. பிஎப்ஐ மீதான தடையை வரவேற்கிறேன்.. அஜ்மீர் தர்கா தலைவர் கருத்து

 கிளாஸ்ரூமிலேயே

கிளாஸ்ரூமிலேயே

இந்த புகார் பல நாட்களாகவே இருந்தாலும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.. இதனால் பொறுமையிழந்த அந்த கிராம மக்கள், ஆத்திரமடைந்து டீச்சரை சுற்றி வளைத்து விட்டனர்.. போதையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.. அந்த பள்ளிக்கு பூட்டுப் போட்டு, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. அதற்குள் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பள்ளிக்கல்வி அலுவலர் நேரடியாக வந்துவிட்டார்.. டீச்சரின் அந்த கிளாஸ்ரூமை ஆய்வு செய்தார்.. அங்கிருந்த டேபிள் டிராயரை திறந்து பார்த்தபோது, ஏகப்பட்ட மதுபாட்டில்களை டீச்சர் அங்கு வைத்திருந்ததை பார்த்து ஆபீசரே ஆடிப்போய்விட்டார்..

 வயிற்றில் புளி

வயிற்றில் புளி

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படியெல்லாம் அட்டகாசம் செய்தால், படிக்கும் பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது என்ற கவலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.. ஆசிரியர்களே இப்படி இருந்தால், பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்? படிக்கிற பிள்ளைகள் எங்கிருந்தாலும் ஒழுக்கமாகவே இருக்கிறார்கள்.. ஆனாலும் சில மாணவர்கள் அட்டகாசம் பெருகிவிட்டது.. இப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவிகள், பட்டப்பகலிலேயே பஸ்ஸிலேயே பீர் குடித்துவிட்டு ரகளை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பெற்றவர்கள் வயிற்றில் புளியை கரைத்தது.

 கன்றாவி கன்றாவி

கன்றாவி கன்றாவி

இதற்குதான் டாக்டர் ராமதாஸ் அப்போது ரொம்பவே நொந்து கொண்டார்.. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியலயே என்று அறிக்கை விட்டு மிகவும் கவலைப்பட்டார்.. மாணவர் மடியில் மாணவிகள் விழுவதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் படுத்து கும்மாளம் அடிப்பதும் என கிளாஸ்ரூமிலேயே கன்றாவிகள் நீண்டு வருகினற்ன.. இதோ இப்போதுகூட ஒரு அரசு பள்ளியில் சம்பவம் நடந்து, வீடியோவாக வந்துவிட்டது..

 கிளாஸ்ரூம்

கிளாஸ்ரூம்

இது எந்த பள்ளி என்று தெரியவில்லை.. அந்த கிளாஸ்ரூமில் டீச்சர்கள் யாரும் இல்லை.. ஆனால், மாணவ, மாணவிகள் எல்லாருமே இருக்கிறார்கள்.. ஒரு மாணவன், ஒரு மாணவி முன்பு டக்கென முட்டி போட்டு காதலை சொல்கிறான்.. திடீரென அந்த மாணவி முன்பு ஒரு பூங்கொத்தையும் நீட்டுகிறான்.. இதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அய்யோ, அம்மா என கதறுவார் என்று பார்த்தால், மாணவனை பார்த்து வெட்கப்படுகிறார்.. வாயில் கைகளை பொத்தி சிரித்து கொள்கிறார்..

 கமுக்க சிரிப்பு

கமுக்க சிரிப்பு

முட்டிபோட்டுள்ள அந்த மாணவனை எழ சொல்கிறார்.. அந்த மாணவனும் எழுந்து நின்று ஒரு கிஃப்ட் நீட்டுகிறார்.. அந்த கிஃப்ட்டை ஆர்வதுடன் வாங்கி பிரித்து பார்க்கிறார் மாணவி.. இதை அந்த கிளாஸில் உள்ள எல்லா பிள்ளைகளும் பார்த்து சிரித்து கொண்டே இருக்கிறார்கள்.. இப்படி அந்த வீடியோ முடிகிறது... இதை யாரோ அந்த கிளாஸ் பிள்ளைகளே வீடியோவாக எடுத்துள்ளனர்.. செல்போன்ளை ஸ்கூலுக்கு கொண்டு போககூடாது என்று சொல்லியும் அதையும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. என்னத்த சொல்ல?

English summary
Hot video and school students love proposal, whats happening in the Classrooms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X