ஆசிரியைக்கு உள்ளாடைகளை பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஓனர்! அணிந்து காண்பிக்குமாறு செக்ஸ் டார்ச்சர்!
பெங்களூர்: பெங்களூரில் பள்ளி ஆசிரியை ஒருவரின் பிறந்தநாளின் போது அவரது வீட்டு உரிமையாளர் உள்ளாடையை பரிசாக கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தெற்கு பெங்களூரில் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது வீட்டில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஒருவர் குடியிருந்து வருகிறார். அவர் பள்ளி ஆசிரியை ஆவார்.
இந்த நிலையில் அனுமந்தநகர் காவல் நிலையத்தில் 42 வயதாகும் அந்த பள்ளி ஆசிரியை தனது வீட்டு உரிமையாளர் மீது ஒரு புகாரை அளித்துள்ளார். அந்த புகார் பகீர் கிளப்புகிறது.

பத்மநாபன்
அந்த புகாரில் அந்த பெண் கூறுகையில், பத்மநாபனின் வீட்டில் நான் 12 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறேன். கடந்த ஆண்டு எனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது எல்லோரையும் போல் வீட்டு உரிமையாளர் என்ற முறையில் பத்மநாபனையும் அழைத்திருந்தேன். மற்றவர்களை போல அவரும் பரிசு பொருளை எனக்கு கொடுத்தார்.

வீட்டு உரிமையாளர்
பிறந்தநாள் விழாவுக்கு வந்தவர்கள் போனவுடன் அவர்கள் தந்த பரிசு பொருட்களை பிரித்து பார்த்தேன். அப்போது வீட்டு உரிமையாளர் பத்மநாபன் கொடுத்த பரிசு பொருளையும் பிரித்தபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் உள்ளாடைகள் இருந்தது. அன்று முதல் பத்மநாபன் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

உள்ளாடைகளை கிப்ட்டாக கொடுத்த ஓனர்
தன்னுடன் வந்துவிடுமாறும் தான் கொடுத்த உள்ளாடைகளை அணிந்து தன்னிடம் காண்பிக்குமாறும் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் எனக்கு போன் போட்டு ஆபாசமாக பேசி வருகிறார். இதற்கெல்லாம் நான் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக என்னை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறுகிறார்.

வீட்டுக்குள் வைத்து பூட்டி
அப்படித்தான் கடந்த 11 ஆம் தேதி இரவு மெயின் கேட்டின் மீது ஏறி உள்ளே வந்து நான் தங்கியிருக்கும் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டார் என தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பத்மநாபனிடம் இதுகுறித்து அனுமந்தநகர் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தன் மீது பொய்யான புகாரை கொடுத்ததாகவும் தான் வீட்டை காலி செய்ய சொன்னதற்காக இப்படியெல்லாம் பொய் புகார் கூறியதாகவும் பத்மநாபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications