இனி போலீசை நம்பினால் வேலைக்காகாது.. துப்பறிவாளனாக மாறிய பெங்களூர் இளம்பெண்! கடைசியில் பெரிய ட்விஸ்ட்
கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் துப்பறிவாளனாக மாறி களத்தில் இறங்கி ஒரு சம்பவம் செய்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் செல்லமாக வளர்த்து வந்த நாய் மாயமான நிலையில், இளம் பெண் ஒருவரே துப்பறிவாளனாக மாறி அந்த நாயைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அதில் சில சுவாரசிய சம்பவங்களும் நடந்துள்ளன. அதைப் பார்க்கலாம்.
இங்கு நாய்களைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைக்கு இணையாக நாய்களையும் வைத்துப் பார்த்துக் கொள்வார்கள். தங்கள் நாய்களுக்கு எதாவது ஆகிவிட்டால்.. அவர்கள் துடிதுடித்துப் போய்விடுவார்கள்.
நாய் தொலைந்து போய்விட்டால் அவ்வளவு தான் இடிந்து போய்விடுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்கு அந்த இளம்பெண் என்ன செய்தார் என்பதைப் பார்க்கலாம்.

கர்நாடகா
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு 20 வயது பெண் தனது நாய் தொலைந்து போன போது என்ன செய்தார் என்பது பற்றிய சம்பவம் தான் இது.. தனது நாயுடன் வாங்கி செல்பவர்கள் தொடங்கி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியைக் கண்டறிவது வரை அனைத்தையும் இந்த பெண்ணே செய்துள்ளார். கடைசியில் அவர் தன்னிடம் இருந்து திருடப்பட்ட ஹஸ்கி இன நாயைக் கண்டுபிடித்துவிட்டார். அவர் எப்படி இதைச் செய்தார் என்பதைப் பார்க்கலாம்.

கடத்தல்
பெங்களூரு ராஜாஜிநகரில் வசிக்கும் சைத்ரா, 5 மாத ஹஸ்கி நாயை வளர்த்து வருகிறார். சைத்ரா ஆகியோர் கதையின் நாயகிகள். சைத்ராவின் நாய் அதுவாகவே வெளியே சென்று சுற்றித் திரியும். கொஞ்ச நேரம் கழித்து அதுவே வீட்டிற்கு வந்துவிடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நாய் அதேபோல வெளியே சென்றுள்ளது. இதையடுத்து நாயை அழைத்து வர பின்னாலேயே சைத்ரா சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தெருவில் அந்த நாயைத் திருடிச் செல்வதைப் பார்த்துள்ளார்.

துப்பறிவாளன்
இதைப் பார்த்தவுடன் அவர் பதறிவிட்டார். அவர்களைப் பிடிக்கச் செல்லும் முன் அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். போலீசாரிடம் சென்று புகார் அளித்தால் அவர்கள் நாய் மாயமானதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். இதனால் சைத்ரா அவராகவே நாயைக் கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து நாய் உரிமையாளர்கள், விலங்கு ஆர்வலர்கள், செல்லப்பிராணி கடைகளை வைத்திருப்போர் என்று அனைவரிடமும் தனது நாய் குறித்து விசாரித்துள்ளார்.

ஆய்வு
மேலும் திருடர்களைக் கண்டு பிடிக்க அப்பகுதியில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் வீடு வீடாகச் சென்று சிசிடிவி காட்சிகளையும் பார்த்துள்ளார். இவர் இப்படி எடுத்த முயற்சிகள் நல்ல பலனைக் கிடைத்துள்ளது. இணையம் ஒன்றில் தனது திருடப்பட்ட நாயை விற்க விளம்பரப்படுத்தியிருந்ததை சைத்ரா பார்த்துள்ளார். அதேபோல சிசிடிவி காட்சிகளில் நாயைத் திருடிச் சென்றவர்களின் வண்டி எண்ணும் கிடைத்துள்ளது. அவர்கள் முகத்தில் ஹூடியை போட்டிருந்ததால்.. முகம் அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

கண்டுபிடிக்கப்பட்ட நாய்
இந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு, சைத்ரா மாகடி ரோடு போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.. போலீசாருடன் சென்று விளம்பரத்தைப் போட்ட நபரைச் சந்தித்துள்ளார். இருப்பினும், நாயை ஏற்கனவே ஒருவரிடம் 3,000 ரூபாய்க்கு விற்றுவிட்டதாக அந்த நபர் தெரிவித்துவிட்டார். போலீசாரின் உதவியுடன் அந்த பெண்ணே நேரடியாக நாயை வாங்கியவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த தனது நாயை அவர் பத்திரமாக மீட்டார்.

புகார் வாபஸ்
நாயை வாங்கியவர்களிடம் சைத்ரா என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார். இதையடுத்து அவர்களும் சைத்ராவிடம் நாயைத் திருப்பி தரச் சம்மதித்துள்ளனர். நாய் கிடைத்தவுடன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துள்ளார் சைத்ரா. இருப்பினும், இந்த விவகாரத்தில் தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்டாராம். அவரது நாயைத் திருடியவர்கள் வயதில் சிறியவர்கள் என்பதால் அவர்களின் எதிர்காலம் கருதி அந்தப் பெண் புகாரை வாபஸ் பெற்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications