Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 7 நிமிடம்! விக்ரம் லேண்டர் தரையிறங்குவதன் முக்கிய தருணமே இதுதான்! சாதிக்கப்போகும் சந்திரயான் 3

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் - 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த செயல்பாடு என்பது மொத்தம் 15 நிமிடங்கள் நடக்கும் நிலையில் கடைசி 7 நிமிடங்கள் தான் மிகவும் முக்கியம். அங்கு தான் மிகப்பெரிய சவால் உள்ளது எனவும், அந்த திக்திக் நிமிடத்தில் விக்ரம் லேண்டர் எப்படி நிலவில் தரையிறங்கும்? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

நிலவில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா தரையிறங்கி உள்ளன. இந்தியா நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 2 திட்டம் மூலம் தரையிறங்க முயன்றது. இது இறுதிக்கட்டத்தில் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது.

How Chandrayaan-3 Lander will touchdown on moon? and What happened on ‛seven minutes of terror time?

முன்னதாக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது வரை இந்த திட்டம் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பூமியின் சுற்றுவட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் சந்திரயான் 3 ப்ரோபல்ஷன் மாடூல் எனும் உந்துவிசை கலனில் இருந்து இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.

இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்க உள்ளது. ஒருவேளை தரையிறங்குவதற்கான சூழல் இல்லாவிட்டால் வரும் 27ம் தேதியில் லேண்டர் தரையிறக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. நிலவின் லேண்டர் தரையிறங்கிய பிறகு ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில் தான் சந்திரயான் -3 திட்டத்தின் விக்ரம் லேண்டரை இன்று நிலவின் தென்துருவத்தில் தரையிறக்குவதில் உள்ள படிநிலைகளையும், அதன் பின்னணியில் உள்ள சிரமங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி எக்ஸ்பர்ட்டுகள் கூறியதாவது:

இன்று மிகவும் முக்கியமான நாள். ஆகஸ்ட் 23 என்பது இந்திய விண்வெளி திட்டத்தின் பொன்னெழுத்துக்காளல் பொறிக்கப்பட கூடிய மாறும் தருணம் உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சந்திரயான் 3 திட்டம் தான். அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே அஞ்சி ஒதுங்கி நிற்கும் வேளையில் நிலவின் தென்துருவத்தில் இந்தியா விக்ரம் லேண்டரை இன்று தரையிறக்கம் செய்கிறது.

இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் - 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்பட உள்ளது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட உள்ளது. நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது என்பது பெரிய சவாலானது. இதன் படிநிலைகளை கேட்டால் உடல் புல்லரித்துபோய்விடும்.

அதாவது சந்திரயான் -3ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' (மெதுவாக) தரையிறங்க உள்ளது. இது மொத்தம் 15 நிமிடங்கள் நடக்கும். அதாவது கடைசி 15 நிமிடத்துக்கு முன்பு விக்ரம் லேண்டர் நிலவுக்கு மேலே குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றி வரும். இந்த சமயத்தில் விக்ரம் லேண்டர் வினாடிக்கு 1.6 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வரும். இதையடுத்து அப்போது ராக்கெட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறக்கம் செய்யப்படும்.

தரையிறக்கும் செயல்முறை தொடங்கியவுடன் விக்ரம் லேண்டரில் உள்ள என்ஜினின் வேகம் எஎன்பது 690 வினாடிகளில் பலமடங்கு குறைக்கப்படும். ஆரம்ப நிலையில் உள்ள வேகத்தை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்படும். வினாடிக்கு 60 மீட்டர் வேகத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க பயணிக்கும்.

நிலவின் தரையில் இருந்து 7.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது விக்ரம் லேண்டர் ஒன்றுக்கு 2 முறை தரையிறங்கும் இடத்தை மீண்டும் சரிபார்க்கும். இதனை இஸ்ரோ மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் கவனிக்கும். அதோடு இந்த செயல்முறையை வெற்றிகரமானதாக மாற்றும் வகையில் இஸ்ரோ தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் விக்ரம் லேண்டரின் அனைத்து சென்சார்களும் நன்றாக செயல்பட்டு தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நிகழ்த்த வேண்டிய முக்கியமான கட்டம் இதில் இருந்து தான் தொடங்கும்.

அதன்பிறகு விக்ரம் லேண்டர் ஃபைன் பிரேக்கிங் என்ற படிநிலையை அடையும். இங்கு விக்ரம் லேண்டர் செங்குத்தாக மாறும். இது சாதாரணமான காரியம் இல்லை. ஏனென்றால் நிலவின் நீள்வட்டபாதையில் கிடைமட்டமாக சுற்றிய விக்ரம் லேண்டரின் வேகத்தை குறைத்து நிலவின் தரையை நோக்கி கீழ்நோக்கி பயணிக்க வைப்பது உண்மையில் சவால் நிறைந்தது.

இந்த செயல் என்பது கடைசி 7 நிமிடத்தில் நடக்கும். இந்த 7 நிமிடங்களை விஞ்ஞானிகள் ‛7 மினிட்ஸ் ஆப் டெரர்(Seven Minutes of Terror) என அழைக்கிறார்கள். ஏனென்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் என்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேல்பகுதியில் மிதக்குமாம். இந்த வேளையில் நம்மை போலவே தான் இஸ்ரோ விஞ்ஞானிகளும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இந்த சமயத்தில் விக்ரம் லேண்டர் என்பது முழுவதும் அதில் உள்ள சென்சார்கள், கேமராக்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும்.

மேலும் தரையிலிருந்து 800-1300 மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் இடத்தை நோக்கி நிலவின் மேல்பகுதியில் இருந்து கீழ்நோக்கி செல்லும். கேமராக்கள் படங்கள் எடுக்க தொடங்கும். அதோடு சென்சார்களும் ஆய்வு பணிகளுக்கான வேலைகளை தொடங்கும். அப்போது 12 வினாடிகள் கழித்து உயரம் 150 மீட்டராக குறையும். இந்த வேளையில் அதிதொழில்நுட்பத்துடன் கூடிய முன்கூட்டிய ஆபத்தை அறியும் வகையிலான கேமரா ஒன்று தரையிறங்கும் இடத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? என்பதை சரிபார்க்கும். அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் அடுத்த 73 வினாடிகளில் விக்ரம் லேண்டர் 150 மீட்டர் தொலைவை கடந்து நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்கும்.

இதுதான் இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் புதிய மைல்கல்லாகும். அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து ஆய்வை தொடங்கும். ரோவர் நிலவில் பயணித்து இந்திய தேசியக்கொடி, இஸ்ரோவில் லோகோவை மண்ணில் பதித்து 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும். அதோடு நிலவின் கால்பதித்த 4வது நாடு என்ற பெருமை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைக்கும். அதோடு நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+