போலீஸுக்கு போக்குக் காட்டி வந்த மணிகண்டன் பெங்களூரில் கைதானது எப்படி?.. பரபர பின்னணி!
பெங்களூர்: பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
மலேசிய சுற்றுலாத் துறை அதிகாரி சாந்தினி. இவர் நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார். அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு சாந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. மணிகண்டனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சாந்தினியுடன் மணிகண்டன் குடும்பம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மாத்திரை
மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த மணிகண்டன், எப்போது சென்னை வந்தாலும் சாந்தினியுடன் இரவு தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதன் விளைவாக சாந்தினி 3 முறை கருத்தரித்தார். அவருக்கு மருத்துவர் நண்பர் மூலம் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார் மணிகண்டன்.

உடல்நிலை பாதிப்பு
இதனால் சாந்தினியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட மணிகண்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இரு தனிப்படை அமைத்து போலீஸார் மணிகண்டனை தேடி வந்தனர்.

இரு போன்கள்
அவரது இரு செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் போலீஸாருக்கு அவர் இருக்கும் இடத்தை அறிவதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டனின் நெருங்கிய நண்பர்களின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீஸ் மூலம் டிரேஸ் செய்தனர்.

பெங்களூர்
அதில் நெல்லையில் ஒரு சிக்னல் காட்டியுள்ளது. அங்கு போய் விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மதுரையில் மணிகண்டனின் நண்பர் இருப்பதாக டவர் காட்டியது. ஆனாலும் அவர் அங்கும் இல்லை. இதையடுத்து ஒரு செல்போன் சிக்னல் பெங்களூரில் காட்டியது.

ரகசிய இடத்தில் விசாரணை
இதை வைத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர். அந்த செல்போன் மணிகண்டனின் நண்பருடையது என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் மணிகண்டன் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications