செல்போன், ஏடிஎம் பயன்படுத்தல.. எஸ்எஸ்எல்சி மாணவியுடன் எஸ்கேப் ஆன டியூசன் ஆசிரியர்.. சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வந்த அபிஷேக் கவுடா என்பவர் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அந்த பகுதியில் உள்ள 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மாணவ மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுத்தார். மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த டியூசன் வாத்தியார், தன்னிடம் டியூசன் படித்த எஸ்எஸ்எல்சி மாணவியுடன் எஸ்கேப் ஆனார். செல்போன், ஏடிஎம் பயன்படுத்தாமல் சுற்றிய அவர், 44 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி என்று பார்ப்போம்.

பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருபவர் அபிஷேக் கவுடா . இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அபிஷேக் கவுடா பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் ஆவார்.. குடும்ப பிரச்சினையால் மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் ஜே.பி.நகரில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மாணவ மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுத்தார். அவரது டியூசனில் கனகபுரா ரோட்டில் வசிக்கும் தம்பதியின் 15 வயது மகளும்அபிஷேக் கவுடாவின் டியூசனுக்கு சென்று வந்துள்ளார்.

bangalore teacher karnataka

இத்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி டியூசனுக்கு வந்த மாணவியுடன் அபிஷேக் கவுடா வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக் கவுடாவைவும் மாணவியையும் தேடி வந்தனர். 44 நாட்கள் கழித்து மாணவியுடன் அபிஷேக் கவுடா சிக்கினார். எப்படி சிக்கினார் என்று பார்ப்போம்.

அபிஷேக் கவுடா மாணவியுடன் ஓடிய பின்னர் செல்போன், ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தாமல் வாழ்ந்து வந்தார். இதனால் அவர் எங்கு உள்ளார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிக்கல் இருந்தது. அபிஷேக் கவுடாவை தேடப்படும் நபராக அறிவித்த போலீசார், அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களிலும் அனுப்பி தேடினார்கள். '

இந்த நிலையில், மண்டியா மாவட்டம் மலவள்ளியில் ஒரு வாடகை வீட்டில் மாணவியுடன் அபிஷேக் வசித்து வருவது பற்றி வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனே ஜே.பி.நகர், மலவள்ளி போலீசார் இணைந்து அபிஷேக் கவுடாவை கைது செய்தார்கள். அந்த மாணவியை மீட்ட போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தார்கள். கைதான அபிஷேக் கவுடா மாணவியுடன் வெறும் ரூ.70 ஆயிரம் பணத்துடன் ஓடிப்போன நிலையில், செல்போன், ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தாமல் வாழ்ந்து வந்தார். வீட்டு உரிமையாளர் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் தந்ததால் சிக்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+