இவ்வளவு தொகுதிகளா? கர்நாடகாவில் சாதித்த ராகுல்! பாரத் ஜோடோ யாத்திரை ‛எபெக்ட்’ இதுதான்! லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தலில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்துள்ள நிலையில் அதனால் எத்தனை இடங்களில் வெற்றி கிடைத்தது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 36 மையங்களில் ஓட்டுகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக படுதோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி மொத்தம் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 104 தொகதிகளில் வென்ற பாஜகவுக்கு இது பெரிய அடியாகும். மேலும் தென்மாநிலங்களில் இருந்து பாஜக மொத்தமாக வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் கர்நாடகாவில் மட்டும் பாஜக ஆட்சியில் இருந்தது. தற்போது அங்கிருந்து பாஜக விரட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்தலில் ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை ஜேடிஎஸ் கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது பெரிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ளன. குறிப்பாக 62 தொகுதிகள் உள்ள ஓல்டு மைசூர் மாவட்டங்களில் அந்த கட்சி வெறும் 14 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. இதனால் அந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு பல தலைவர்கள் உழைத்தனர். குறிப்பாக மண்ணின் மைந்தனும், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் சித்தராமையா உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
அதேபோல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிடட்டவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகாவில் அடிக்கடி முகாமிட்டு திறந்த வாகனத்தில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களில் உரையாடி வாக்கு சேகரித்தனர். இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் கைக்கொடுத்துள்ளது.
அதாவது கர்நாடகாவில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட 20 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை, மண்டியா மாவட்டம் நாகமங்களா, ஸ்ரீரங்கப்பட்டணா, மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு, நரசிம்மராஜா, வருணா(சித்தராமையா தொகுதி), ராயபுரா புறநகர், துமகூரு மாவட்டம் குப்பி, சிரா, சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே, ஹரியூர், மொலகால்மூரு, பல்லாரி புறநகர், பல்லாரி நகர் ஆகிய 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மாறாக மைசூர் மாவட்டம் சாமுண்டேஸ்வரி, துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி, துருவக்கெரே ஆகிய தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியும், துமகூரு மாவட்டம் கிருஷ்ணராஜா மற்றும் ராய்ச்சூர் தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடந்த இடங்களில் 75 சதவீதம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications