RCB: 17 வருடத்தில் ஒரு கப் கூட இல்லை.. ஆனாலும் சரியாத "ஆர்சிபி" சாம்ராஜ்ஜியம்.. கோலியை தாண்டி பல காரணங்கள் இருக்கு!
பெங்களூர்: ஆர்சிபி அணி கடந்த 17 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இருப்பினும், அந்த அணியின் ரசிகர் பட்டாளம் தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. கோப்பையை வென்ற சில அணிகளை விடவும் ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர். கோப்பையை வெல்லாமல் ஆர்சிபி அணியால் மட்டும் இந்தளவுக்கு ரசிகர் பட்டாளத்தைச் சேர்க்க முடிந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.. ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது நான்காவது முறையாகும். 4 முறை முன்னேறி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வென்றதே இல்லை.

கமல் ஹாசன்
குறிப்பாகப் பல ஆண்டுகள் லீக் சுற்றில் கூட வெளியேறியுள்ளனர். அப்படி இருந்தும் கூட ஆர்சிபி ரசிகர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை. அதிகரித்தே வந்துள்ளது. இதற்குக் கோலி, கிரிக்கெட், எமோஷன் என்பதைத் தாண்டியும் சில உத்திகள் உள்ளன. அவை என்ன.. ஆர்பிசி அதை பக்காவாக அமல்படுத்தியது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2008ல் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும்போது உருவான 8 அணிகளில் ஒன்று தான் ஆர்சிபி. இதை அப்போது பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்த இப்போது மோசடி குற்றச்சாட்டில் வெளிநாட்டில் பதுங்கியுள்ள விஜய் மல்லையா வாங்கியிருந்தார். அப்போது பெங்களூர் அணியின் முகமாக டிராவிட் இருந்தார். கிரிக்கெட்டை தாண்டி பெங்களூர் அணியை ஒரு பிரண்டாக உருவாக்க வேண்டும் என்பதில் அணி நிர்வாகம் அப்போதே தெளிவாக இருந்தது.
லைப் ஸ்டைல் பிராண்ட்
விஜய் மல்லையா அப்போது பல்வேறு பிரண்டுகளை நிர்வகித்து வந்த நிலையில், அதில் ஒரு பிரண்ட்டான ராயல் சேலஞ்ச் என்பதின் பெயரில் இருந்தே அணிக்குப் பெயரைத் தேர்வு செய்தார். அணியை வைத்தே அந்த பிராண்டிற்கும் விளம்பரம் கிடைக்கும் என்பதே அவரது திட்டம். ஆர்சிபி அணி ஒரு கிரிக்கெட் அணி என்பதைத் தாண்டி இதை ஒரு லைஃப் ஸ்டைல் நிறுவனம் போல விளம்பரப்படுத்தினர்.
பொதுவாக ஐபிஎல் தொடர் அதிகபட்சம் 2 முதல் 2.5 மாதங்கள் வரை மட்டுமே நடக்கும். அப்போது மட்டுமே ஐபிஎல் பீவர் இருக்கும். ஐபிஎல் முடிந்த பிறகு வழக்கமான இந்திய டீமின் போட்டிகள் தொடங்கிவிடும். இதனால் அந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் செயலற்றதாக இருக்கும். ஆனால் ஆர்சிபி அப்படிச் செய்யவில்லை. ஆண்டு முழுக்க தங்கள் ரசிகர்களுடன் கனெக்டட்டாக இருந்தனர். சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினர்.

பக்காவாக திட்டமிட்ட ஆர்சிபி
முதலில் பெங்களூரில் ஆர்சிபி கபே திறந்தனர். இப்போது ஐபிஎல் நிர்வாகமே பல ஊர்களில் பேன் பார்க்கை நடத்துகிறது. இது அந்த பேன் பார்க்கின் இன்னொரு வெர்ஷன் எனச் சொல்லலாம்.. இதன் மூலம் ஆர்சிபி ரசிகர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் அமர்ந்து போட்டிகளை பார்க் முடிந்தது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்தி உதவியது.
மேலும், கோலியை வைத்து ஹஸ்டில் பை ஆர்சிபி என்ற பிரண்ட்டை தனியாகத் தொடங்கினர். இதில் பிட்னஸில் ஆர்வமாக இருப்போர்.. ஜிம் செல்வோரை ஆர்பிசியால் எளிதாகக் கவர முடிந்தது. இதுபோக பல்வேறு லைஃப் ஸ்டைல் பிரண்ட்களை தொடங்கினர். இது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க வைத்து உதவியது.
காரணங்கள்
சோஷியல் மீடியாவில் ஆர்சிபி தான் மற்றவர்களுக்கு முன்னோடி என்றே சொல்லலாம். மற்ற அணிகளை விட சமூக வலைத்தள பக்கங்களில் ஆர்சிபி எப்போதும் ஆக்டிவாக இருக்கும். அதை வைத்துப் பல புரோமோஷன்களை நடத்தினர். குறிப்பாக 12th மேன் ஆர்மி, இ சாலா கப் நமதே ஆகியவற்றை டிரெண்ட் செய்தனர். இவை மிகப் பெரியளவில் டிரெண்டானது.
இப்படி ஆர்சிபி அணி நிர்வாகம் முன்னெடுத்த பல்வேறு யுக்திகள் காரணமாகவே அந்த அணியின் ரசிகர் வட்டம் அதிகரித்தது. எமோஷனல் என்பதைத் தாண்டி அணி நிர்வாகம் திட்டமிட்டு எடுத்த நடவடிக்கைகளாலேயே ஆர்சிபி ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. அதேநேரம் அணி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையைத் தாண்டி கோலி, அவர்களின் கிரிக்கெட் ஸ்டைல் ஆகியவற்றுக்கும் இதில் முக்கிய பங்கு இருப்பதை மறுத்துவிட முடியாது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications