திருடர்களை மாட்டிவிட்ட Apple Airpods.. கைவரிசை காட்டிய கும்பல் சிக்கியது எப்படி? சுவாரசிய பின்னணி
பெங்களூர்: பெங்களூர் அருகே வீட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் திருடி சென்ற Airpods தான். ஏர்பாட்ஸ்-யை வைத்து திருடர்களின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தது எப்படி? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் அருகே தொட்டபள்ளாப்புரா டவுனில் உள்ள டிபி நாராயணப்பா படாவனே பகுதியில் வசித்து வருபவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட திருடர்கள் அவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த ரூ.115 கிராம் தங்க நகைகள், சில்வர் நகைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், பணம் என்று மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர்.
மறுநாள் ஊரில் இருந்து வீடு திரும்பியவர்கள் திருடுப்போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தொட்டபள்ளாப்புரா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து ஆப்பிள் Airpods-யை திருடர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த Airpods ஆக்டிவேட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதன் லோகேஷனை போலீசார் கண்டுபிடித்தனர். அது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அருகே உள்ள கூட்லு கேட் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர். அங்கு மொத்தம் 3 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அரவ்கள் புருசோத்தம் (வயது 22), தர்ஷன் (20) மற்றும் சந்துரு (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தான் வீட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புகார் கொடுத்த 6 மணிநேரத்தில் போலீசார் 3 பேரையும் கைது செய்து பொருட்களை மீட்டனர். இதற்கு முக்கிய காரணம் வீட்டில் இருந்து திருடப்பட்ட ஆப்பிள் Airpods-ம் அதன்மூலம் கிடைத்த லொகேஷனும் தான் காரணம்.
மேலும் கைதான 3 பேரின் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது தாவணகெரே, உப்பள்ளி, துமகூரு, தெலுங்கானா மாநிலத்தின் சில இடங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதில் புருசோத்தம் தனது சிறுவயது முதலே திருட்டை அரங்கேற்றி வருவது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தான் துமகூரு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் கைவரிசை காட்டி சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications