பெங்களூர் டூ கொழும்பு.. கோடிக்கணக்கில் இருந்த பணம் .. ஏர்போர்ட்டில் எக்குத்தப்பாக சிக்கிய 3 பேர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இருந்து இலங்கை நாட்டின் தலைநகரான கொழும்புவுக்கு சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணத்தை சிலர் விமானத்தில் கடத்தி செல்ல திட்டமிடுவது பற்றி பெங்களூரு மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்த நபர்களை பிடிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். அங்கு சிக்கிய 3 பேரிடம் ரூ.2.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் என்பது இந்தியாவின் 3வது மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஆகும். சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலைத்திற்கு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி,இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள்,வெளிநாடுகளுக்கு செல்ல பயன்படுத்துகிறார்கள்.உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவைகள் பெங்களூரில் இருந்து இருக்கிறது. மிகவும் பரபரப்பான பெங்களூர் விமான நிலையத்தில் அவ்வப்போது சிலர் தங்கம் கடத்துவது உள்பட கடத்தல் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்படுவார்கள்.. அப்படித்தான் பணம் கடத்த முயன்ற கும்பல் சிக்கியுள்ளது

Bangalore Sri Lanka flight

பெங்களூரில் இருந்து இலங்கை நாட்டின் தலைநகரான கொழும்புவுக்கு சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணத்தை சிலர் விமானத்தில் கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.இது பற்றி பெங்களூருமண்டல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்த நபர்களை பிடிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக திட்டம் தீட்டினார்கள்.

இதன்படி, பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு செல்ல இருந்த சந்தேகத்திற்கு உரிய 3 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. அவர்களது உடைமைகளை பரிசோதனை செய்த போது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இலங்கையை சேர்ந்த விமல்ராஜ் துரைசிங்கம், திலீபன் ஜெயந்திகுமார் மற்றும் இந்தியாவை சேர்ந்த வீரகுமார் என்று தெரிந்தது. கைதான 3 பேரிடமும் இருந்து ஒட்டு மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ.2.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+